வரும் 2022 இல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக பெருகும் ஜெய்ப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவிப்பு!!
இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக வந்தடைந்தார். இதையடுத்து, இக்கூட்டத்தில் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
அப்போது பேசிய அவர்; ராஜஸ்தானில் முதலவர் வசுந்த்ரா சிறப்பாக செயல்படுகிறார். பாஜக ஆட்சியின் கீழ் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் தற்போது பெரும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக வளர்ந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள், விவசாயிகள் அனைவரும் அதிக பலன் பெற்றுள்ளனர்.
Launching a scathing attack at the Congress, Prime Minister Narendra Modi said that people have nowadays started calling the party as 'Bail Gaadi' as some of their prominent leaders are out on bail
Read @ANI Story| https://t.co/5gOcaSffgD pic.twitter.com/JsRNOPYr9V
— ANI Digital (@ani_digital) July 7, 2018
ராஜஸ்தானில் தண்ணீர் வசதி, மின்சார வசதி பெருகியுள்ளது. வரும் 2022 இல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக பெருகும். இதற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். 32 கோடி பேருக்கு வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளது, சமையல் காஸ் விநியோகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் இந்த மாநிலத்தை அழிவு பாதைக்கு கொண்டு சென்றனர் என்று மக்களிடையே உரையாற்றினார்!