நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா இன்று பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலை நேரில் சந்தித்தார்!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-விற்கு ஆதரவு கோரி பாஜக தலைவர் அமித்ஷா ‘சம்பர்க் சே சமர்நாத்’ என்னும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார். இந்த திட்டத்த்தின் மூலம் அமித்ஷா குறைந்தது 50 பேரை நேரில் சந்தித்து பாஜக-வின் 4 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். மேலும் பாஜக தலைவர்களின் தலைமையில் 4000-க்கும் மேலான பொதுக்கூட்டங்களை ஒருங்கினைக்கவும் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
It was wonderful meeting @NSaina, our Badminton star, and her family at their home in Hyderabad. Shared with them several achievements and path breaking initiatives of Modi government in the last 4 years, as a part of 'Sampark for Samarthan' campaign. pic.twitter.com/Bo5Fr1XSNn
— Amit Shah (@AmitShah) July 13, 2018
இன்று இந்த சம்பர்க் சே சமர்நாத் திட்டம் தொடர்பாக பிரச்சாரம் மேற்கொள்ள ஒருநாள் பயணமாக தெலுங்கானா சென்றுள்ளார் அமித்ஷா. இந்த பயணத்தின் போது அவர் ஈ-நாடு குழமத்தின் தலைவர் ராமோஜி ராவ் அவர்களையும், பிரபர பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், மூத்த அரசியல் தலைவர் ஸ்ரீநி ராஜூ ஆகியோரையும் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தெலுங்கானாவில், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலை நேரில் சந்தித்து பாஜக-வின் 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்கினார்.