CBSE முதல் பருவ பொதுத் தேர்வு: இன்று அட்டவணை வெளியீடு

CBSE 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகளின் அட்டவணை இன்று வெளியிடப்படும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 18, 2021, 08:29 AM IST
CBSE முதல் பருவ பொதுத் தேர்வு: இன்று அட்டவணை வெளியீடு title=

புதுடெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகளின் அட்டவணை இன்று வெளியிடப்படும். மாணவர்கள் தேர்வுக்கான அட்டவணையை மத்திய வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.nic.in அல்லது cbseacademic.nic.in இல் பார்த்து விவரங்களை தெரிந்துகொள்ளலாம். 

சிபிஎஸ்இ (CBSE) 10,12ம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகள் நவம்பர்-டிசம்பர் 2021 இல் நடைபெற உள்ள நிலையில், பாடத்திட்டத்தின் முதல் பாதியை மட்டுமே உள்ளடக்கிய MCQ எனப்படும் multiple choice questions என்ற வகயில் வினாத்தாள் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE)  தெரிவித்துள்ளது. குளிர்காலம் என்பதால் தேர்வுகள் காலை 11.30 மணி முதல் தொடங்கும்.

"10, 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகள் ஆஃப்லைனில் நடத்தப்படும்; அக்டோபர் 18 ஆம் தேதி இதற்கான அட்டவணை அறிவிக்கப்படும். 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பருவநிலை -1 பொதுத் தேர்வுகள் 90 நிமிட அவகாசம் கொண்ட  அப்ஜெக்டிவ் (MCQ) வகை தேர்வாக இருக்கும்" என்று சிபிஎஸ்இ  (CBSE) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு முதல், சிபிஎஸ்இ போர்டு கல்வி அமர்வை இரண்டாகப் பிரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இரண்டாம்நிலை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்.  கோவிட் -19 சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோவிட் -19  இரண்டாவது அலை காரணமாக, 2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் வாரியம் தேர்வுகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | TN School Reopening: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய முடிவை எடுத்தது தமிழக அரசு

அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு கேள்வித் தாளை வாசிப்பதற்காக வழங்கப்படும் நேரம் 20 நிமிடங்கள். முன்னதாக கேள்வித்தாளை வாசிக்க  15 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ், முதல்நிலை தேர்வு முடிந்தவுடன், மதிப்பெண் மதிப்பெண்களின் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

முதல் பருவத்திற்குப் பிறகு மதிப்பெண் மட்டுமே வெளியிடப்படும். முதல் மற்றும் இரண்டாம் பருவத் தேர்வுகளுக்குப் பிறகே இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

சிபிஎஸ்இ வாரியம் 2021-22 ஆம் ஆண்டு முதல் பருவ நிலை தேர்வுகளுக்கான 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மாதிரித் தாள்களையும்,  முதல் நிலைத் தேர்வுகளுக்கான மதிப்பெண் திட்டத்தையும் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbseacademic.nic.in  என்ற வலைதளத்தில் பார்க்கலாம்.

ALSO READ: 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - அக்டோபர் 12 ஆம் தேதி ஆலோசனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News