சத்திஸ்கர் கோர்பா மாவட்டத்தின் பாங்கிமோங்ராவில் வசிக்கும் ஒரு இளைஞன் ஒரு விநோதமான பிரச்சனயை சந்திக்க நேரிட்டது. ஆயிரம் கனவுகளுடன் திருமணம் செய்த அவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கட்கோராவைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்த நிலையில், திருமணமாகி 7 நாட்களுக்குப் பிறகு, 26 மே 2015 அன்று காலை, அவரது மனைவி படுக்கையில் மயங்கிக் கிடந்ததை பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்தான். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, அவர் மது அருந்தியதோடு அசைவம், குட்காவுக்கும் அடிமையாகி இருப்பது தெரிய வந்தது. இந்த விஷயம் பெண்ணின் மாமியார்களுக்கு தெரிய வந்ததும், அவர்களும் பலவாறு அவலை திருத்த முயன்றனர். ஆனால் அவர் சிறிதும் ஒத்துழைக்கவில்லை. அதன் பிறகு அவள் தன் புகுந்த வீட்டினரிடம் தவறாக நடந்து கொள்ள ஆரம்பித்தாள்.
மேலும், குட்கா சாப்பிட்டுவிட்டு படுக்கையறையில் எங்கு வேண்டுமானாலும் எச்சில் துப்பியதாகவும், அதனை தடுத்தால் கணவனிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அந்த பெண் 2015 டிசம்பர் 30 அன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதன் காரணமாக அவர் இரண்டு முறை மாடியில் இருந்து குதித்து இரண்டு முறை பூச்சி மருந்தை குடித்தார். இருப்பினும், ஒவ்வொரு முறையும் அதிர்ஷ்டவசமாக அவள் உயிர் பிழைத்தாள். மனைவியின் இந்த கோமாளித்தனத்தால் மன உளைச்சலுக்கு ஆளான கணவர் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், குடும்பநல நீதிமன்றம் கணவரின் மனுவை நிராகரித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கணவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மேலும் படிக்க | ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் நண்பனை கொலை செய்த சக நண்பர்கள்!
இந்த வழக்கு சத்தீஸ்கர் நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார். ஆண்களைப் போல் பான் மசாலா, குட்கா, மது ஆகியவற்றுடன் அசைவம் சாப்பிட்டு கணவனை மனைவி துன்புறுத்தும் செயல் கொடுமையானது என நீதிபதி கூறியுள்ளார். நீதிபதி கவுதம் பாதுரி மற்றும் நீதிபதி ராதாகிஷன் அகர்வால் அடங்கிய இரட்டை அமர்வு, குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரித்து, கணவர் தாக்கல் செய்த விவாகரத்து மனுவை ஏற்றுக்கொண்டது.
மேலும் படிக்க | செண்டை மேளம் வாசித்தப்படி மாஸ் எண்ட்ரி கொடுத்த மணமகள்! இணையத்தை கலக்கும் வீடியோ!
மேலும் படிக்க | டாஸ்மாக் நிர்வாகிகளே உடனே இந்த லிஸ்ட் ரெடி பண்ணுங்க : சென்னை ஐகோர்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ