Covishield, Covaxin: கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசி விலைகள் அதிகரிப்பு

மே ஒன்றாம் தேதியிலிருந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி ( Corona Vaccine) செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 25, 2021, 08:41 AM IST
  • மே ஒன்றாம் தேதியிலிருந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி ( Corona Vaccine) செலுத்திக்கொள்ளலாம்
  • மூக்குவழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியை முன்னெடுத்து செல்ல வேண்டும்
Covishield, Covaxin: கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசி விலைகள் அதிகரிப்பு title=

இந்தியாவில் கொரோனா பரவல் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டும் வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மே ஒன்றாம் தேதியிலிருந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி ( Corona Vaccine) செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கோவாக்சின் (Covaxin), கோவிஷீல்டு (Covoshield) ஆகிய இரு தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை தயாரிக்கும் நிறுவனங்கள், மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான விலைகளை அதிகரித்துள்ளன. 

இதில் கோவாக்ஸின் மருந்தை, தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம், மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு விற்பனை செய்து வரும் நிலையில், மாநில அரசுகளுக்கு 600 ரூபாய்கும்,  மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு 1200 ரூபாய்க்கும் விற்கப்படும் என அறிவித்துள்ளது. 

ALSO READ | கொரோனா காலத்தில் உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 மருத்துவ கருவிகள்

மூக்குவழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியை முன்னெடுத்து செல்ல, கோவாக்சின் விலை உயர்வு அவசியமாகிறது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிஷீல்ட் தயாரிக்கும் சீரம் நிறுவனமும் (Serum Institute of India) தனது விலை விவரத்தை வெளியிட்டது. அதில் கோவிஷீல்ட் தடுப்பூசி, வெளிச்சந்தையில் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600  என்ற விலையும், மாநில அரசுகளுக்கு ரூ.400 என்ற விலையிலும் விற்கப்படும் என அறிவித்துள்ளது.

வெளிநாடுகளோடு ஒப்பிடும்போது நம்நாட்டில் தடுப்பூசி விலை மிகவும் குறைவு என தெரிவித்த சீரம் நிறுவனம் (SII), அமெரிக்காவில் (America) தடுப்பூசி தனிநபர் ஒருவருக்கு ரூ.1,500 என்ற அளவிலும், ரஷ்யாவில் ரூ.750 என்ற அளவிலும், சீனாவில், ரூ.750 என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது கோவிஷீல்ட் விலை இந்தியாவில் மிகவும் குறைவு  என்று சீரம் நிறுவனம் மேலும் கூறியது. 

ALSO READ | வீட்டிலேயே ஆக்ஸிஜன் அளவை சரியாக பராமரிக்க சுகாதார அமைச்சகம் பரிந்துரைக்கும் வழிகள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News