புதுடெல்லி: ராகுல் காந்தியை கட்சித் தலைவராக உடனடியாகத் தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானத்தை டெல்லி காங்கிரஸ் நிறைவேற்றியது
காங்கிரஸ் (Congress) கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை உடனடியாக இந்நாள் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை டெல்லி மாநில காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானம் உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் கட்சியின் டெல்லி பிரிவு தெரிவித்திருக்கிறது.
Delhi Congress passes resolution to make Rahul Gandhi President of the party from immediate effect.
— ANI (@ANI) January 31, 2021
முன்னதாக, நாட்டின் மிகவும் பழமையான தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி 2021 ஜூன் மாதத்திற்குள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கப் போவதாக தெரிவித்திருந்தது. சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் உட்கட்சித் தேர்தலை நடத்த காங்கிரஸ் செயற்குழு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | மீண்டும் காங்கிரஸின் தேசியத் தலைவராகிறாரா ராகுல் காந்தி?
இதற்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தி கடந்த மாதம் நடத்திய முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தியிடம் கட்சியின் தலைமை பொறுப்பை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.கட்சி எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவேன் என்று ராகுல் காந்தியும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிட்டிருந்தது.
இது குறித்து பேசிய ராகுல் காந்தி (Rahul Gandhi), கட்சி அவருக்கு எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவேன் என்று கூறினார். அதுமட்டுமல்ல, கட்சியின் தலைவராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதை அனைவரும் சேர்ந்து எடுக்கவேண்டும், வாக்கெடுப்பு நடத்தினால் நல்லது என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்ததும் நினைவில் கொள்ளத்தக்கது.
இது, ராகுல் மீண்டும் கட்சியின் தேசியத் தலைராவதற்கு கொடுத்த ஒப்புதலாகவே பார்க்கப்படுகிறது.
Also Read | இந்த முறை பட்ஜெட் முன்பு இல்லாத வகையில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR