டெல்லி தேர்தல்: 8 ஆம் தேதி காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில்கள் சேவை

டெல்லி தேர்தலை அடுத்து பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 6, 2020, 05:04 PM IST
டெல்லி தேர்தல்: 8 ஆம் தேதி காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில்கள் சேவை title=

புது டெல்லி: மொத்தம் 70 இடங்களை கொண்ட தேசிய தலைநகரம் டெல்லியில் வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 8) அன்று சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அன்று பொதுமக்கள் வாக்களிக்க சரியான நேரத்திற்கு தங்கள் வாக்கு மையங்களுக்கு செல்ல சிறப்பு ஏற்பாடாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது டெல்லியில் பிப்ரவரி 8 ஆம் தேதி அன்று அதிகாலை 4 மணிக்கு மெட்ரோ சேவைகள் தொடங்கும் என அறிவித்துள்ளது.

இந்தமுறை டெல்லியில் மீண்டும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலனவர்களின் கருத்தாகவே இருக்கிறது. ஆனாலும் கடந்த தேர்தலை போல அர்விந்த் கேஜ்ரிவால் அரசு, 67 இடங்களில் வெற்றி பெறுமா? என்று தெரியவில்லை. அவர்கள் இந்தமுறை 70-70 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறியுள்ளனர். ஆனால் ஷாகின் பாக் விவகாரத்தை வைத்து பாஜக செய்த தேர்தல் அரசியலால், அந்த கட்சி சுமார் 20 இடங்களில் வெல்லும் எனக் கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் பாஜக வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்தமுறை டெல்லியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் களத்தில் உள்ளன. அதுமட்டுமில்லாமல் இன்னும் சில கட்சிகளும் போட்டியிடுகின்றன. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. தேர்தல் 8 ஆம் தேதியும், அதன் முடிவுகள் 11 ஆம் தேதியும் வெளியாக உள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News