டெல்லியில் கடும் பனிமூட்டம்- 94 ரயில்கள் தாமதம்

மோசமான வானிலை காரணமாக டெல்லி செல்லும் ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

Last Updated : Dec 8, 2016, 10:37 AM IST
டெல்லியில் கடும் பனிமூட்டம்- 94 ரயில்கள் தாமதம் title=

புதுடெல்லி: மோசமான வானிலை காரணமாக டெல்லி செல்லும் ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

கடும் பனிமூட்டடின் காரணமாக டெல்லியில் இருந்து புறப்படும் 94 ரயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. 2 ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 16 ரயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானகளும் இந்த பனிமூட்டடின் காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 6 சர்வதேச விமானங்கள் மற்றும் 7 உள்நாட்டு விமானங்களும் தாமதமாகப்பட்டுள்ளது. ஒரு உள்நாட்டு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெல்லி என்சிஆர், உபி மற்றும் பஞ்சாப்  மாநிலங்களில் இன்று அதிக அளவு பனிமூட்டம் காணப்பட்டது. 50 மீட்டர்வரை ஆட்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் பனி காணப்பட்டது. 

Trending News