அபுதாபியில் உலக அரசாங்க மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியுள்ளது. தொழில்நுட்பமும் கொள்கையுமே துபாயின் வெற்றிக்கு காரணம். தொழில்நுட்பம் தொடர்மாற்றங்களை சந்தித்து வருகிறது.
இயற்கை பேரிடருக்கு எதிராக போராட தொழில்நுட்பம் உதவும். இது மக்களுக்கு உதவி செய்கிறது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வ பணிக்கு பயன்படுத்த வேண்டும். அழிவுக்கு பயன்படுத்த கூடாது.
Overwhelmed by the affection at the community programme, held at the iconic @DubaiOpera. Happy to have got the opportunity to interact with the Indian diaspora. Sharing my speech on the occasion. https://t.co/Xx2OsehL3w pic.twitter.com/B3DnVHlzJ6
— Narendra Modi (@narendramodi) February 11, 2018
இணையதளம் வழி நடக்கும் குற்றங்கள், தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு உதாரணம். இந்தியாவில் உள்ள பிரச்னையை தீர்க்க தொழில்நுட்பம் உதவும்.
வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை போன்ற பிரச்னைகளை இந்தியா சந்தித்து வருகிறது.
Technology for Development! In his keynote address on this theme at @WorldGovSummit, PM highlighted the importance of assimilating technology in the governance to ensure equitable growth and prosperity for all. PM emphasized the role technology was playing in India's development. pic.twitter.com/kNOHWIio8v
— Raveesh Kumar (@MEAIndia) February 11, 2018
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இந்தியா மையமாக மாறிவருகிறது. 2020-ல் விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவதே இலக்கு. இவ்வாறு அவர் பேசினார்.