கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தொடங்கி நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நாட்டில் பதிவாகும் புதிய கொரோனா தொற்றூ பாதிப்புகள், இது வரை இல்லாத அளவை எட்டி விட்டன.
இதன் தாக்கத்தை நாட்டின் உச்ச நீதிமன்றத்திலும் காணலாம். உச்சநீதிமன்ற ஊழியர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து திங்கள்கிழமை முதல், உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் தங்கள் வீட்டில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணைய மேற்கொள்வார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், உச்ச நீதிமன்ற வளாகத்தை சுத்திகரிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ALSO READ | போராட்டம் என்ற பெயரில் சாலைகளை ஆக்கிரமிக்க கூடாது: உச்ச நீதிமன்றம்
உச்சநீதிமன்ற ஊழியர்கள் கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற அறை உட்பட உச்சநீதிமன்ற வளாகம் முழுவதும் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது, இதன் காரணமாக அனைத்து நீதிமன்ற பிரிவு நடத்தும் விசாரணைகள் திட்டமிடப்பட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கும்.
திங்களன்று, நாட்டில் 1,70,000 என்ற அளவிற்கும் அதிகமாக புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். ஒரு நாளில் பதிவாகும் மிக அதிக எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திங்களன்று மட்டும், கொரோனா காரணமாக நாடு முழுவதும் 900திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.
ALSO READ | சட்ட விரோத குடியேறிகளின் தலைநகராக இந்தியா இருக்க முடியாது: மத்திய அரசு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR