தலைநகர் தில்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறைகள் மற்றும் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றி சம்பவம், உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. நாட்டை அவமானப்படுத்தும் வகையிலான இந்த சம்பவத்திற்குப் பிறகு, பொது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விவசாய தலைவர்கள் ( Farmer Leaders) சிலர், வன்முறையை தூண்டும் வகையில் பேசிய விடியோக்களும் வைரலாகியுள்ள நிலையில், பொது மக்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். அதில் உழவர் தலைவர் ராகேஷ் டிக்கைட் 'பேரணிக்கு லத்திகளைக் கொண்டு வாருங்கள்' மேலும் கொடியை என வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
சுமார் இரண்டு மாத காலங்களாக, தில்லி எல்லை (Delhi Border) பகுதியில், போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை, இப்போது, பொதுமக்களே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்போது பொதுமக்களே எல்லையில் போராடுபவர்கள் இடத்தை காலி செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.
#WATCH | Delhi: Group of people claiming to be locals gather at Singhu border demanding that the area be vacated.
Farmers have been camping at the site as part of their protest against #FarmLaws. pic.twitter.com/7jCjY0ME9Z
— ANI (@ANI) January 28, 2021
கடந்த 2 மாதங்களாக போராட்டக்காரர்கள் சாலையை அடைத்துக் கொண்டதால, பல இன்னல்களை தாங்கிக் கொண்ட கிராமவாசிகள், இப்போது, அவர்கள் காலி செய்ய வேண்டும் என போராட்டம் நடத்துகின்றனர்.
உள்ளூர் மக்கள் இன்னும் 24 மணி நேரத்தில் இடத்தை காலி செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
குடியரசு தினத்தில் (Republic Day) நடந்த தலைக்குனிவை ஏற்படுத்தும் சம்பவத்திற்கு பிறகு, ஏற்கனவே இரண்டு வேளாண் சங்கங்கள், போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளன. எல்லையில் முகாமிட்டுள்ள போராட்டக்காரர்கள் பாதி பேர் சொந்து ஊர் திரும்பி விட்டனர்.
ALSO READ | பேரணிக்கு லத்தியுடன் வாருங்கள்...வைரலாகும் விவசாயிகள் தலைவர் வீடியோ
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR