தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இந்தியாவில் அதிக மக்களால் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுவாக தீபாவளிக்கு முந்தைய நாள் சிறப்பு நாள் என்பதால் பலரும் தங்க நகைகளை வாங்க விரும்புகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எவ்வளவு அதிகரித்துள்ளது என்று பார்ப்போம். இன்று சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்துள்ளது.
இன்று அக்டோபர் 29ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்தது. இது நகை வாங்க விரும்புபவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நேற்று 40 ரூபாய் விலை குறைந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் தங்க நகைகளின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 7,375 என விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் தங்க நகை விலை ரூ. 59,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தை போலவே, தூய தங்கமும் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் இப்போது ரூ. 7,880 ஆகவும், 8 கிராம் ரூ. 63,040 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ. 108க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ எடையுள்ள வெள்ளியின் விலை 1,08,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது, இந்தியாவில் 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,375 ஆகவும், 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,405 ஆகவும் உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ.65 உயர்ந்து தற்போது 1 கிராம் ரூ.8,405 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் ஒரு சவரன் ரூ.520 அதிகரித்து ரூ.64,360 ஆக இருந்தது. இந்த விலை உயர்வால், தீபாவளி பண்டிகைக்கு தங்க நகைகள் வாங்க விரும்புவோர் சிரமப்படுகின்றனர். தங்கம் விலை சமீப காலமாக மிக அதிகமாக இருந்தது, 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ.80,450 ஆகவும், 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ.73,750 ஆகவும் உள்ளது. மக்கள் வழக்கமாக 24 காரட் தங்கத்தை பார்களாக அல்லது நாணயங்களாக வாங்குகிறார்கள்.
சிலர் 2025 தீபாவளிக்குள் தங்கத்தின் விலை ரூ.1 லட்சம் வரை உயரும் என்று நினைக்கிறார்கள். அரசாங்கம் சில வரிகளை குறைக்கவில்லை என்றால் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மக்கள் தற்போது தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவதே விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அக்டோபர் தொடக்கத்தில் இருந்து, தங்கத்தின் விலை மிகவும் உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் நடக்கும் பொருளாதார மாற்றங்களால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை, எனவே தங்கம் தேவை என்றால் இப்போதே வாங்கி கொள்ளலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தீபாவளி சமயத்தில் கிடைக்கும் போனஸை பயன்படுத்தி தங்கம் வாங்க நினைத்தவர்களுக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும், திருமணம் போன்ற விஷயங்களுக்கு தங்கம் தேவைப்படுபவர்களுக்கு இந்த விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ