புதுடெல்லி: 7th Pay Commission latest update: நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி (டிஏ) பாக்கிகள் குறித்து மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் சில நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம்.
மோடி அரசு ஒரே நேரத்தில் அரசு ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சத்தை வரவு வைக்கலாம் என்று ஊடகங்கள் தொடர்ந்து ஊகங்களை வெளியிட்டு வருகின்றன.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 16ஆம் தேதி நடைபெறலாம் என்றும், இது அரசு ஊழியர்களுக்கு பரிசாக இருக்கும் என்றும் ஒரு சில ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ஜேசிஎம் தேசிய கவுன்சிலின் செயலாளர் (பணியாளர் தரப்பு) ஷிவ் கோபால் மிஸ்ராவை மேற்கோள் காட்டி வெளியான ஊடக அறிக்கைகள், கவுன்சில் தனது கோரிக்கையை அரசாங்கத்தின் முன் வைத்துள்ளதாகவும், ஆனால் இரு தரப்பும் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை என்றும் கூறுகின்றன.
மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு 8,000 ஊதிய உயர்வு! மத்திய அரசு அறிவிப்பு
அமைச்சரவை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அது இன்னும் முடிவாகவில்லை என்றும் ஊடகங்கள் மேலும் தெரிவித்தன. அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரே முறையில் செலுத்த வேண்டும் என தொழிலாளர் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
மிஸ்ராவின் கூற்றுப்படி, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) மற்றும் நிதி அமைச்சகம், செலவினத் துறை அதிகாரிகளுடன் JCM இன் கூட்டுக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் போது 18 மாத DA நிலுவைத் தொகையும் ஒருமுறை தீர்வாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அக்டோபர் 2021 முதல் 17% இல் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும் நிலுவைத் தொகை இன்னும் டெபாசிட் செய்யப்படவில்லை.
JCM இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவை மேற்கோள் காட்டி, லெவல்-1 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்று முன்பு குறிப்பிட்டிருந்தோம்.
அதேசமயம், லெவல்-13 (7வது CPC அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900) அல்லது நிலை-14 (ஊதிய அளவு), ஒரு ஊழியரின் கைகளில் உள்ள டிஏ நிலுவைத் தொகை ரூ.1,44,200-2,18,200 ஆக இருக்கும். செலுத்தப்படும் என்று அறிக்கைகள் அனுமானங்களை வெளியிட்டுள்ளன.
செலவினத் துறையின் ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் மொத்தம் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR