ஹேக் செய்யப்பட்ட யுஜிசி ட்விட்டர் கணக்கு மீட்பு... 2 நாட்களில் 3 அரசு ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

மர்ம நபர்களால் முடக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் ட்விட்டர் கணக்கு சில மணி நேரங்களில் மீட்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் அரசு தொடர்பான 3 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

Written by - Chithira Rekha | Last Updated : Apr 10, 2022, 07:56 PM IST
  • ஹேக் செய்யப்பட்ட யுஜிசி ட்விட்டர் கணக்கு
  • சில மணி நேரங்களுக்குப் பின் மீட்பு
  • 2 நாட்களில் 3 அரசு 3 ட்விட்டர் கணக்குகள் ஹேக்
ஹேக் செய்யப்பட்ட யுஜிசி ட்விட்டர் கணக்கு மீட்பு... 2 நாட்களில் 3 அரசு ட்விட்டர் கணக்குகள் முடக்கம் title=

பல்கலைக்கழக மானியக்குழு (UGC)-வின் ட்விட்டர் கணக்கை சுமார் 3 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர். மேலும் இந்தக் கணக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் சிலர் இன்று ஹேக் செய்தனார். ஹேக் செய்யப்பட்டவுடன் இந்த ட்விட்டர் பக்கத்தில் கார்ட்டூன் படங்கள் வைக்கப்பட்டு, அர்த்தமற்ற பல பதிவுகள் வெளியாகின. 

UGC Twitter Handle Hacked

மேலும் படிக்க | பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக்! பிட் காயின் பற்றிய போஸ்டால் பரபரப்பு!!

சில மணி நேரங்களில் பல்கலைக்கழக மானியக்குழுவின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டு தேவையற்ற பதிவுகள் நீக்கப்பட்டன. இதுதொடர்பாக லக்னோ காவல்நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களில் இதே போன்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் அலுவலகம், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியவற்றின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டன. 

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக ட்விட்டர் கணக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஹேக் செய்யப்பட்டது. யோகி ஆதித்யநாத்தின் முகப்புப் படம் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக கார்ட்டூன் குரங்கின் புகைப்படம் முகப்புப்படமாக வைக்கப்பட்டது. 400-க்கும் மேற்பட்ட சம்பந்தமில்லாத ட்வீட்டுகள் அந்தக் கணக்கிலிருந்து பதிவிடப்பட்டன. சில மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அந்தக் கணக்கு மீட்கப்பட்டது. அரசு தொடர்பான ட்விட்டர் கணக்குகள் தொடர்ந்து ஹேக் செய்யப்படுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CMO UP Twitter Account Hacked

மேலும் படிக்க | Tech Tips: ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க சில ‘Password’ டிப்ஸ்..!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News