Bugdet 2024 Highlights: நாடு முழுவதும் உள்ள சுமார் ஒரு கோடி குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை சூரிய ஒளி மின்சாரம் மூலம் இலவசமாக (Free Solar Power) வழங்கப்படும் என பட்ஜெட் உரையின் மீது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது, வீட்டின் மேற்கூரையில் சூரிய ஒளி மின்சார அமைப்பை பொருத்தும்பட்சத்தில் இந்த சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஆண்டுக்கு 18 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கடந்த ஜன. 22ஆம் தேதி நடந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் குறிப்பிடத்தக்க நாளில் பிரதமர் மோடியின் உறுதிமொழியை தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிடுவதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Budget 2024: ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஜாக்பாட்
Interim Budget 2024-25 | Union Finance Minister Nirmala Sitharaman says, "Through roof-top solarisation, 1 crore households will be enabled to obtain up to 300 units of free electricity every month. This scheme follows the resolve of the Prime Minister on the historic day of the… pic.twitter.com/PAmRlhFI8z
— ANI (@ANI) February 1, 2024
கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு 2 கோடி வீடு கட்டப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீட்டுத் திட்டம் என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கானது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 11 மணியளவில் நிர்மலா சீதாராமன் தனது உரையை தொடங்கிய நிலையில், சுமார் ஒரு மணிநேரம் உரையாற்றினார்.
After concluding the interim Budget speech, Finance Minister Nirmala Sitharaman introduces the Finance Bill 2024 in Lok Sabha pic.twitter.com/hoF8uP8rJA
— ANI (@ANI) February 1, 2024
மேலும் படிக்க | Budget 2024: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே எங்கள் நோக்கம்- நிதி அமைச்சர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ