COVID-19 Update: 132 நாட்களுக்குப் பிறகு 30,000-க்கும் குறைவானோர் தொற்றால் பாதிப்பு

132 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் 30,000 க்கும் குறைவானோர் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27, 2021) தெரிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 27, 2021, 10:30 AM IST
COVID-19 Update: 132 நாட்களுக்குப் பிறகு 30,000-க்கும் குறைவானோர் தொற்றால் பாதிப்பு  title=

புதுடில்லி: 132 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் 30,000 க்கும் குறைவானோர் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27, 2021) தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 29,689  பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

சிகிச்சையில் இருக்கும் கொரோனா (Coronavirus) நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 124 நாட்களுக்குப் பிறகு 4,00,000 க்கு கீழே வந்துள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 3,98,100 ஆக உள்ளது. இது மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 1.27% ஆகும்.

வாராந்திர நேர்மறை விகிதம் (Positivity Rate) இப்போது 2.33% ஆகவும், தினசரி நேர்மறை விகிதம் 1.73% ஆகவும் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திங்கள் முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை 415 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதனுடன் கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்பட்ட மொத்த மரணங்களின் எண்ணிக்கை 4,21,382 ஆக உயர்ந்துள்ளது. 42,363 பேர் சிகிச்சைபெற்று குனமடைந்துள்ளனர். இதுவரை 3.06 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

ALSO READ: COVID-19 Update: 66வது நாளாக குறைத்து வரும் கொரோனா.. இன்று 1,785 பேர் பாதிப்பு!

மறுபுறம், தடுப்பூசி (Vaccination) செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 44.19 கோடியை தாண்டியுள்ளது.

இதற்கிடையில், ஒட்டுமொத்த உலகளாவிய COVID-19 தொற்று எண்ணிக்கை 195 மில்லியனுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 4.18 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

35,287,269 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6,27,039 இறப்புகளுடன் அமெரிக்கா உலகின் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாகத் தொடர்கிறது. அதைத் தொடர்ந்து இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் உள்ளன.

ALSO READ: District Wise Data: இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News