Karnataka Election 2023: கர்நாடக சட்டசபை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் வந்து தங்களது வாக்கு உரிமைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மதியம் ஒரு மணி வரை 37.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடலோர மாவட்டமான உடுப்பியில் அதிகபட்ச வாக்குப்பதிவும், பெங்களூரு உள்ளிட்ட பல மாவட்டங்களில் குறைந்த வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது. வெயிலின் வெப்பத்தால் கல்யாண் கர்நாடகாவின் கலபுர்கி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு குறைந்துள்ளதால் மாலையில் வாக்கு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை வாக்குகள் பதிவாகியிருக்கிறது என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க: கர்நாடக சட்டசபை தேர்தல் 2023: ஜேடிஎஸ் கூட்டணி கிடையாது -காங்கிரஸ் உறுதி
மதியம் 1 மணி வரை வாக்குப்பதிவு - 37.25%
37.25% voter turnout recorded till 1 pm, in #KarnatakaElections pic.twitter.com/YldlIoQwvg
— ANI (@ANI) May 10, 2023
மாவட்ட வாரியான வாக்குப்பதிவு நிலவரம்:
- BBMP சென்ட்ரல் 29.41%
- BBMP வடக்கு 29.90%
- BBMP தெற்கு 30.68%
- பாகல்கோட் 40.87%
- பெங்களூர் வில்லேஸ் 40.16%
- பெங்களூர் நகரம் 31.54%
- பெல்காம் 37.48%
- பெல்லாரி 39.74%
- பிதார் 37.11%
- விஜயபுரா 36.55%
- சாமராஜநகர் 30.63%
- சிக்கபல்லாபூர் 40.15%
- சிக்மகளூர் 41.00%
- சித்ரதுர்கா 36.41%
- தட்சிண கன்னடா 44.17%
- தாவங்கரே 38.64%
- தார்வாட் 36.14%
மேலும் படிக்க: நம்பிக்கையுடன் முன்னேறும் காங்கிரஸ்! பதற்றத்தில் பாஜக
- கடக் 38.98%
- கலபுர்கி 32.69%
- ஹாசன் 40.84%
- ஹாவேரி 36.74%
- குடகு 45.64%
- கோலார் 36.87%
- கொப்பாலா 39.94%
- மாண்டியா 39.38%
- மைசூர் 36.73%
- ரைச்சூர் 38.20%
- ராமநகர் 42.52%
- ஷிமோகா 41.02%
- தும்கூர் 40.60%
- உடுப்பி 47.79%
- உத்தர கன்னடம் 42.43%
- விஜயநகர் 39.56%
- யாதகிரி 35.68%
மேலும் படிக்க: போர்க்களமாய் பரபரப்பின் உச்சத்தில் கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்! வெற்றி யாருக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ