கர்ப்பிணிகளை பரிசோதிக்கும் வீடியோ இணையத்தில் வைரல்! சிசிடிவி காட்சிகள் லீக் ஆனது..

Viral Video Of Pregnant Women : ஒரு மருத்துவமனையில் பெண்களை பரிசோதிக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

Written by - Yuvashree | Last Updated : Feb 18, 2025, 07:03 PM IST
  • ஷாக்கிங் சிசிடிவி வீடியோ..
  • கர்ப்பிணி பெண்களை பரிசோதிக்கும் வீடியோ..
  • லீக் ஆனது எப்படி..?
கர்ப்பிணிகளை பரிசோதிக்கும் வீடியோ இணையத்தில் வைரல்! சிசிடிவி காட்சிகள் லீக் ஆனது.. title=

Viral Video Of Pregnant Women : கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் உலகளவில் அதிகரித்திருக்கிறது. அதிலும், குறிப்பாக இந்தியாவில் இந்த கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. நாளிதழை திறந்தாலே சிறுமி முதல் மூதாட்டி வரை அனைவருக்கும் இழைக்கப்படும் வன்கொடுமைகள் கணக்கிலடங்காமல் இருக்கின்றன. அந்த க்ரைம் லிஸ்டில் புதிதாக இப்போது இன்னொரு கேஸ்-ம் சேர்ந்திருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

குஜராத்தில் நடந்த சம்பவம்:

பெண்கள், உடை மாற்றும் அறையில், தங்கியிருக்கும் ஹாஸ்டலில், பொதுக்கழிப்பறையில் என எங்கெங்கோ தெரியாத இடங்களில் வைக்கப்படும் கேமராக்கள்  மூலம் சில கயவர்கள் அவர்களை வீடியோ எடுக்கின்றனர். பின்னர், இதை ஏதேனும் ஒரு தளத்தில் பதிவிட்டு அல்லது அந்த பெண்களுக்கே அனுப்பி பணம் பறிக்கும் ஒரு கும்பலும் இருக்கிறது. ஆனால், இந்த கொடுமை அனைவரும் பாதுகாப்பாக உணரும் மருத்துவமனையிலேயே நடக்குமா? அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது குஜராத்தில் நடந்திருக்கிறது. ராஜ்கோட் பாயல் மெட்டர்னிட்டி ஹோம் என்ற மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள்தான் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மருத்துவமனை குஜராத்தில் இருக்கிறது.

வெளியான சிசிடிவி காட்சிகள்!!

மேற்கூறிய மருத்துவமனையில், மகப்பேறுக்கான சிகிச்சைகள் பார்க்கப்படுவது வழக்கம். குறிப்பாக பெண்களுக்கு இங்கு அதிகளவில் பரிசோதனைகள் நடந்து வந்துள்ளன. இங்கு பரிசோதனை மேற்கொண்ட கர்பிணிகள் 7 வீடியோக்களை யூடியூப் மற்றும் டெலிகிராம் தளங்களில் யாரோ லீக் செய்திருக்கின்றனர். இந்த வீடியோக்கள், மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த காட்சிகளில், பெண்கள் மருத்துவர்கள் கையால் சிகிச்சை பெறுவதும், அவர்களுக்கு ஊசி போடுவதும் பதிவாகி இருக்கிறது. 

எங்கிருந்து பகிரப்பட்டது?

இந்த வீடியோக்களில் யூடியூப் தளத்தில் Megha MBBS என்ற சேனலில் இருந்து பகிரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனுடன் சேர்த்து, அந்த முழு வீடியோக்களுக்கான டெலிகிராம் இணைப்புகளும் அதில் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இது போன்ற வீடியோக்கள் 5 லட்சம் வரை வியூஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணை:

மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, இதனை அகமதாபாத் சைபர் கிரைம் போலீஸார் எடுத்து விசாரிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து, சிசிடிவி கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மருத்துவமனை நிர்வாகமும், காவல் துறை அதிகாரிகளும் எவ்வளவோ முயற்சி செய்தும் இந்த வீடியோக்களை இணையத்தில் இருந்து நீக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இது குறித்து மேலும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தேர்வு எழுத பாராசூட்டில் சென்ற கல்லூரி மாணவன்!! வைரலாகும் வீடியோ..

மேலும் படிக்க | ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிய நபர்!! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News