Man Vs Wild: பிரதமர் மோடியுடன் டீ அருந்தும் புகைப்படத்தை பகிர்ந்த பியர் கிரில்ஸ்

உத்தராகண்ட்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் 2019ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரதமர் மோடியுடன் பியர் கிரில்ஸ் நடத்திய ‘Man Vs Wild’ நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பானது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 6, 2021, 10:58 PM IST
  • பிரதமர் மோடியுடன் பியர் கிரில்ஸ் நடத்திய ‘Man Vs Wild’ நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பானது.
  • ஆபத்துக்கள் நிறைந்த பகுதிகளுக்கு சென்று அங்கு எப்படி உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வாழ்வது குறித்து மிகவும் வித்தியாசமான முறையில் விளக்குவார்.
  • பிரதமர் மோடியுடன் டீ அருந்தும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட பியர் கிரில்ஸ்.
Man Vs Wild: பிரதமர் மோடியுடன் டீ அருந்தும் புகைப்படத்தை பகிர்ந்த பியர் கிரில்ஸ்  title=

‘Man Vs Wild’ எனும் காட்டில்  எப்படி வாழ்வது என்பது குறித்த பியர் கிரில்ஸ் நடத்தி வரும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இதில் பியர் கிரில்ஸின் சாகசங்களுக்கு அவரது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த பியர் கிரில்ஸ் காடுகள், பனிப்பாறைகள், ஆபத்தான மலைகள் என உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ஆபத்துக்கள் நிறைந்த பகுதிகளுக்கு சென்று  அங்கு எப்படி உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வாழ்வது குறித்து மிகவும் வித்தியாசமான முறையில் விளக்குவார்

பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, போன்ற பிரபலங்களுடன் இவர் நிகழ்ச்சிகளை பியர் கிரில்ஸ் நடத்தியிருக்கிறார்.
உத்தரகாண்ட்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் 2019ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரதமர் மோடியுடன் பியர் கிரில்ஸ் நடத்திய ‘Man Vs Wild’ நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பானது.

இந்நிலையில், பிரதமர் மோடியுடன் டீ அருந்தும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட பியர் கிரில்ஸ் ‘தண்ணீர் நனைந்த நிலையில் பிரதமர் மோடியுடன் ஒரு கப் டீ’ எனக் குறிப்பிட்ட அவர், இது தனக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களுள் ஒன்று எனக் கூறியிருக்கிறார்.

அதே நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸும், பிரதமர் மோடியும் மிகவும் குளிரான நதி ஒன்றை கடந்து வந்த பின்னர் பிரதமர் மோடிக்கு பியர் கிரில்ஸ் வேப்ப இலைகளை பயன்படுத்தி செய்யப்பட்ட டீ தயாரித்து வழங்கினார்.

அப்போது வேப்ப இலை பற்றி பிரதமர் மோடியிடம், பியர் கிரில்ஸ் கேட்ட போது, உடனடியாக, அது இனிப்பான வேப்பிலை (Sweet neem) என நகைச்சுவையாக பதிலளித்தார். 

ALSO READ | 'Made in India' கோவிட் -19 தடுப்பூசிக்காக  25 நாடுகள் காத்திருக்கின்றன: S.ஜெய்சங்கர்

Trending News