முஜாஹிதீன் பயங்கரவாதி அப்துல் சுபான் குரேஷி எனும் டௌக்கீரை, டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்!
குரேஷி... 2008-ஆம் குஜராத்தில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர். இது தவிர இதற பல வழக்குகளிலும் டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி ஆவார். இவர்மீது பல்வேறு பயங்கரவார குற்றச்சாட்டுகள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து DCP பிரமோத் குஷ்வாஹா தெரிவிக்கையில்... "பல்வேறு பயங்கரவாத வழக்குகளில் தேடப்பட்டு வந்த குரோஷி-யை நாங்கள் கைது செய்துள்ளோம். இந்திய முஜாஹதீன் அமைப்பினை தோற்றுவித்தவர் இவர்தான். தற்போது மீண்டும் இந்திய முஜாஹிதீன் அமைப்பினை ஒருங்கினைக்கும் வேலையில் இவர் ஈடுபட்டு வந்திருக்கின்றார்" என தெரிவித்துள்ளார்.
இதுநாள்வரை நேபாளத்தில் போலி ஆவணங்களுடன் அப்துல் சுபான் குரேஷி வாழ்ந்ததாக சிறப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத குழுவானது, இந்தியாவில் "இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம்(SIMI) தடைசெய்யப்பட்ட பின்னர் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!
Special Cell of Police arrested Abdul Subhan Qureshi of SIMI-IM arrested after a brief exchange of fire. He was involved in 2008 serial blasts in Gujarat. #Delhi
— ANI (@ANI) January 22, 2018