நாட்டை உலுக்கிந நிர்பயா வழக்கினை வரும் பிப்., 16 ஆம் நாள் ஒத்தி வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது!
"2012-ஆம் ஆண்டு, டிசம்பர் 16-ஆம் நாள், தன் நண்பருடன் இளம்பெண் ஒருவர், டெல்லி பேருந்தில் பயணித்தபோது தான் இந்த கொடுமை நடந்தது.
அப்பேருந்தின் ஓட்டுநர் உள்பட ஐந்து பேர் கொண்ட குழு அந்த இளம்பெண் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கினர். அவருடன் பயணித்த அவரது நண்பரையும் மோசமாகத் தாக்கினர். உயிருக்கு போராடும் நிலையில், ஆடைகளின்றி, ரத்தம் வழிய இருவரையும் சாலையில் தூக்கி வீசி சென்றனர்.
அந்த சாலையில் சென்ற சில நல்லுள்ளங்கள் இருவரையும் காப்பாற்றும் முயற்சியாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்.
இந்த முயற்சியில் அப் பெண்னின் நண்பர் காப்பாற்றப்பட்டார், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்தியாவை உலுக்கிய இச்சம்பவத்தில் உயிரிழந்த அப்பெண்னுக்கு இந்திய ஊடகங்கள் நிர்பயா(பயமற்ற பெண்) என பெயர் சூட்டினர்.
இந்த கொடூர சம்பவத்தில் குற்றவாளிகளாக முகேஷ், பவன்குமார் குப்தா, வினாய் ஷர்மா, அக்ஷய் குமார், ராம்சிங் ஆகியே 5 பேருக்கும் உயர்நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்தது. தீர்ப்பின் பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள நால்வருக்கு தூக்கு காத்திருக்கிறது.
இந்நிலையில் வினாய் ஷர்மா, பவன்குமார் குப்தா ஆகிய இருவரும் தீர்ப்பை எதிர்த்து கடந்த டிச., 12-ம் நாள் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பின்னர் இந்த மனுவின் விசாரணையினை வரும் பிப்., 16 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது!
Nirbhaya case: Supreme Court adjourned the matter for February 16, after convicts Vinay and Pawan sought more time to file their responses before the court.
— ANI (@ANI) January 22, 2018