Night Curfew Update: கொரோனாவின் புதிய Omicron தொற்று நாட்டில் வேகமாக அதிகரித்து வருகின்றன. அதன்படி இந்தியாவில் Omicron பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. ஒமிக்ரான் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் உஷார் நிலையில் உள்ளன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்து வருகின்றன.
இதற்கிடையில் ஒமிக்ரான் (Omicron) குறித்து மத்திய அரசு மீண்டும் மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்டா மாறுபாட்டை (Delta Variant) விட ஒமிக்ரான் குறைந்தபட்சம் மூன்று மடங்கு அதிக தொற்றுநோயானது என்று மத்திய அரசு மாநிலங்களை எச்சரித்தது, இது கொரோனாவிலிருந்து மிகவும் ஆபத்தானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரானுக்கு எதிராக மாநிலங்களை எச்சரித்த மத்திய அரசு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ALSO READ |Omicron: 7 மாநிலங்களில் இரட்டை இலக்கத்தை எட்டிய ஒமிக்ரான்
இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில், இரவு நேர ஊரடங்கு விதித்தல், பெரிய அளவில் கூடுவதைக் கடுமையாகக் கட்டுப்படுத்துதல், திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் ஆட்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், சோதனை மற்றும் கண்காணிப்பை அதிகரிப்பது போன்ற மூலோபாய முடிவுகளை கோடிட்டுக் காட்டினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பதற்கான ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ஒமிக்ரான் கவலையை அந்தக் கடிதம் எடுத்துக்காட்டுகிறது. அந்தக் கடிதத்தில், 'மாவட்ட அளவில் கோவிட்-19 பாதிப்புக்குள்ளான மக்கள் தொகை, புவியியல் பரவல், மருத்துவமனை உள்கட்டமைப்பு மற்றும் அதன் பயன்பாடு, மனிதவளம், தடைசெய்யப்பட்ட பகுதிகளை அறிவிப்பது, தடைசெய்யப்பட்ட பகுதிகளின் சுற்றளவு அமலாக்கம் போன்றவற்றின் அடிப்படையில் வெளிவரும் தரவுகளைத் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். . மாவட்ட மட்டத்திலேயே பயனுள்ள முடிவெடுப்பதற்கு இந்த ஆதாரம் அடிப்படையாக இருக்க வேண்டும்.
இந்த நிலையில் நாட்டில், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான ஒமிக்ரான் பாதிப்புகள் உள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் தலா 54 ஒமிக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அடுத்த இடங்களில் தெலுங்கானா (20) மற்றும் கர்நாடகா (19) உள்ளன.
ALSO READ | Omicron symptoms: எச்சரிக்கை! இதுதான் Omicron இன் புதிய அறிகுறிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR