மாநில காங்., பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார் PC.சாக்கோ!

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ ராஜினாமா!!

Last Updated : Feb 12, 2020, 04:37 PM IST
மாநில காங்., பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார் PC.சாக்கோ! title=

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ ராஜினாமா!!

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று பி.சி.சாக்கோ ராஜினாமா செய்துள்ளார். டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுபாஷ் சோப்ரா ராஜினாமா செய்த நிலையில் சாக்கோவோம் ராஜினாமா செய்துள்ளார். 

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி (AAP) அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தல் மூலம் முதல்வர் கேஜரிவால் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்துள்ளார். கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் வேட்பாளா்களில் 63 போ் டெபாசிட்டுகளை இழந்துள்ளனா். 

இந்நிலையில், தில்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ ராஜினாமா செய்துள்ளார். ஏற்கெனவே டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுபாஷ் சோப்ரா ராஜினாமா செய்த நிலையில் தற்போது சாக்கோவும் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து சாக்கோ ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்... தில்லியில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி ஷீலா தீக்ஷித் முதல்வராக இருந்தபோது 2013-ல் தொடங்கியது. புதிய கட்சியான ஆம் ஆத்மி எங்களின் வாக்கு வங்கியை எடுத்துக்கொண்டது. அது ஆம் ஆத்மியிடமே இருக்கிறது. அதனை எங்களால் ஒருபோதும் திரும்பப்பெற முடியாது என்றார். 

டெல்லியில் கடந்த சில ஆண்டுகளில் பெற்ற தோல்வியை காட்டிலும் இந்த சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை காங்கிரஸ் சந்தித்துள்ளது. பி.சி. சாக்கோவின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான மிலிந்த் தியோரா கண்டனம் தெரிவித்துள்ளார்.  

 

Trending News