பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தில் உள்ளனர். அவர்களுக்கு, ஆறுதல் அளிக்கும் வகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 11 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.79.33 ஆகவும் டீசல் விலை 11 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.71.62-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோன்று டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ 76.43-க்கும் ஆகவும், டீசல் விலை ரூ 67.85-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
முன்னதாக, நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்தது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணை விலை உயர்ந்ததால், பெட்ரொல் டீசல் விலை உயர்த்தப்பட்டதாக எண்ணை நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தொடர்ந்து 14-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.