பெட்ரோல் ரூ.3.77, டீசல் ரூ.2.91 லிட்டருக்கு விலை குறைப்பு

Last Updated : Apr 1, 2017, 10:17 AM IST

Trending Photos

பெட்ரோல் ரூ.3.77, டீசல் ரூ.2.91 லிட்டருக்கு விலை குறைப்பு title=

இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு எதிரொலி காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.91 குறைந்துள்ளன. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. 

இந்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு எதிரொலி காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.91 குறைந்துள்ளன. 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.28-க்கு விற்பனையாகிறது. விலைக்குறைப்பைத் தொடர்ந்து இன்று முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70.51-க்கு விற்பனை செய்யப்படும். டீசல் விலை ரூ.62.48-ல் இருந்து ரூ.59.57 ஆக குறையும். ஜனவரி 15-ம் தேதிக்கு பிறகு தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Trending News