மத்திய நிதியமைச்சகத்திற்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான பனிப்போர் நீடித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று முமபையில் நடைபெறுகிறது!
ஆறுமாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசின் திட்டங்களுக்காக ரிசர்வ் வங்கியின் உபரி மூலதனத்தைப் பயன்படுத்தி, சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குமாறு ரிசர்வ் வங்கி மூலம் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு நெருக்குதல் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே வாராக் கடன் பிரச்சினையால் தத்தளிக்கும் வங்கிகள் மேலும் தாராளமாக கடன் கொடுப்பது சாத்தியமில்லை என்று உர்ஜித் பட்டேல் பின்வாங்கியதையடுத்து அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பிரதமர் மோடியை உர்ஜித் பட்டேல் கடந்த வாரம் ரகசியமாக சந்தித்ததாகவும் இருவருக்கும் இடையே இருந்த வேறுபாடுகள் தீர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Reserve Bank of India (RBI) board meeting begins in Mumbai pic.twitter.com/Ts8eBWHJDB
— ANI (@ANI) November 19, 2018