குடியரசு தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் ராணுவ வீரர்கள் பீட்டிங் தி ரிட்ரீட் விழாவை நடத்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையொட்டி, இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் அமோக உற்சாகம் காணப்பட்டது. அதாவது, குடியரசு தினத்தை முன்னிட்டு, பஞ்சாபில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் பீட்டிங் தி ரிட்ரீட் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் குழுமியிருந்தவர்கள் தேசபக்தியுடன் 'பீட்டிங் தி ரிட்ரீட்' விழாவில் கலந்து கொண்டனர். ராணுவ வீரர்களின் கம்பீரத்தையும், வீரத்தையும் கண்டு மெய்சிலிர்த்தனர்.
மேலும் படிக்க | Republic Day 2023: குடியரசு தின வாழ்த்துக்கள், கவிதைகள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்
கொடியிறக்கும் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் அனைவரும் பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம், ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் என கோஷங்களை எழுப்பினர். இதனால் வீரர்களிடமும் தனி உற்சாகம் காணப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, 'ஜேசிபி' என்ற கூட்டுச் சோதனைச் சாவடியானது, வரலாற்றுச் சிறப்புமிக்க ஷெர்ஷா சூரி சாலை அல்லது கிராண்ட் டிரங்க் சாலை 'அட்டாரி-வாகா'வில் எல்லைத் தூண் எண் 102-க்கு அருகில் நிறுவப்பட்டது. இந்தியப் பக்கத்தில் உள்ள கிராமம் 'அட்டாரி' என்று அழைக்கப்படுகிறது.
#Amritsar #indiapakistan pic.twitter.com/I2nMDXqsae
— Ayushman Singh Jamwal (@JamwalNews18) January 23, 2023
மகாராஜா ரஞ்சித் சிங்கின் படையில் இருந்த தளபதிகளில் ஒருவரான சர்தார் ஷாம் சிங் அட்டாரிவாலாவின் பூர்வீக கிராமம் அது. பாகிஸ்தான் பக்கத்தில் உள்ள வாயில் வாகா என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் 'அட்டாரி பார்டர்' என்று அழைக்கப்படுவதைப் போலவே, பாகிஸ்தானிலும் 'வாகா பார்டர்' என்று அழைக்கப்படுகிறது. இந்த விழாவை ஏற்பாடு செய்ய இரு நாட்டு அரசுகளும் ஒப்புக்கொண்டன. 1947 ஆம் ஆண்டில், இரு நாடுகளையும் இணைக்கும் NH-1 இல் அமைந்துள்ள கூட்டுச் சோதனைச் சாவடியின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இராணுவத்தின் குமாவோன் ரெஜிமென்ட், ஜே.சி.பி.க்கு முதல் குழுவை வழங்கியது. 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி பிரிகேடியர் மொஹிந்தர் சிங் சோப்ராவால் முதல் கொடியேற்ற விழா நடைபெற்றது.
மேலும் படிக்க | Republic Day: குடியரசு தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் என்ன? இதோ முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ