Covid Compensation தொடர்பாக 4 வாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

கோவிட் -19 தொற்றுநோயால் குடும்ப உறுப்பினரை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ .4 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிய மனு தொடர்பான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு 4 வார கால அவகாசம் அளித்துள்ளது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 16, 2021, 07:00 PM IST
  • கொரோனா மரணங்களுக்கு 4 லட்ச ரூபாய் நிவாரணம் கோரிய மனு
  • கொரோனா மரணங்களுக்கான நிவாரணத்தை 4 வாரங்களுக்குள் நிர்ணயிக்க வேண்டும்
  • உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது
Covid Compensation தொடர்பாக 4 வாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் title=

புதுடெல்லி: கோவிட் 19 இழப்பீடு: கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பணம் செலுத்தும் திட்டத்தை உருவாக்குவதற்கு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு 4 வார கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (National Disaster Management Authority) கீழ் உள்ள தேசிய ஆணையம் (National Authority) இந்த தொகையை நிர்ணயிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முன்பே குறிப்பிட்டிருந்தது.

கோவிட் நோய் காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

Also Read | Vehicle Scrappage Policy: பழைய வாகன உரிமையாளர்களுக்கு பல சலுகைகள் ..!!

கோவிட் -19 தொற்றுநோயால் குடும்ப உறுப்பினரை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ .4 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் ஜூன் 30 அன்று தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான நீதிமன்ற அமர்வு, கோவிட் -19 காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இது போன்ற நிவாரணத் தொகையை கொடுப்பது சாத்தியம் இல்லை என்ற  மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Also Read | 3rd Dose of Corona Vaccine: மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவை?

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (National Disaster Management Authority) கீழ் உள்ள தேசிய ஆணையத்தால் இந்த தொகையை நிர்ணயிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

நியாயமான தொகையை முடிவு செய்யுமாறு தேசிய ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவிட் பாதிப்பு ஏற்பட்டு இறப்பவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதை எளிதாக்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Also Read | Corona Vaccine: கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற 3வது டோஸ் தடுப்பூசி அவசியம்! திடுக்கிடும் தகவல்

இழப்பீட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்காத தேசிய ஆணையம் தனது கடமையைச் செய்யத் தவறியது குறித்து உச்ச நீதிமன்றம், தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது.

இந்த பின்னணியில், கோவிட் -19 தொற்றுநோயால் குடும்ப உறுப்பினரை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எவ்வளவு நிவாரணம் கொடுப்பது என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்கு தேசிய ஆணையத்திற்கு தற்போது 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணத் தொகை நிர்ணயிக்கப்பட்டால், கோவிட் -19 தொற்றுநோயால் குடும்ப உறுப்பினரை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த நிவாரணத் தொகை பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Also Read | Covid Third Wave: மூன்றாம் அலையை தவிர்க்க சுலபமான வழிகள் உங்களுக்காக…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News