ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ், பெண்களின் கற்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ், ஓட்டுக்குப் பணம் கொடுப்பது, வாங்குவது பற்றி பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், ஓட்டுக்குப் பணம் கொடுத்தால், வாங்கக்கூடாது என்பதை நாட்டு மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஏனென்றால், ஓட்டு என்பது நாம் பெற்ற மகள்களைப் போன்றதாகும். நமது மகள் அல்லது ஒரு பெண் கற்பிழந்தால், அவள்சார்ந்த சமூகம் மற்றும் ஊர் என அனைவரின் மரியாதை பாதிக்கப்படும். அதைப் போலத்தான், ஓட்டுக்குப் பணம் வாங்குகிற செயல், நாட்டின் ஜனநாயகத்தின் மீதுள்ள மரியாதையை குறைக்கிறது என்று பேசியுள்ளார்.
ஒரு பெண் கற்பிழந்துவிட்டால், அவள்சார்ந்த ஊர், சமூகம் எல்லாரும் பாதிக்கப்படுவார்களா இது எந்த வகையில் நியாயம் என, சரத் யாதவுக்கு எதிராக, மகளிர் ஆர்வலர்கள் கண்டனம் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.