Anuj Thapan Died: மும்பையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் (Salman Khna) வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கில் கைதாகி, போலீஸ் காவலில் விசாரணையில் இருந்த அனுஜ் தாபன் (Anuj Thapan Suicide) இன்று (மே 1) தற்கொலை செய்து உயிரிழந்தார் என தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பாலிவுட் நடிகர் சல்மானின் குடியிருப்பு உள்ளது. சல்மான் கானின் உயிருக்கு பல்வேறு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு நீண்ட காலமாக கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கேங்க்ஸ்டர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரர் ஆகியோரிடம் இருந்து சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு Y பிளஸ் பாதுகாப்பாக உயர்த்தப்பட்டது.
அந்த வகையில், மும்பை பாந்தராவில் உள்ள சல்மான் கானின் வீட்டின் வெளியே கடந்த ஏப். 14ஆம் தேதி மர்ம நபர்கள் சேர்ந்து ஐந்து முறை துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மொத்தம் நான்கு பேரை மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். குறிப்பாக, கைதான சாகர் பால் மற்றும் விக்கி குப்தா ஆகியோர்தான் மோட்டார் பைக்கில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றஞ்சாட்டுப்பட்டனர். தொடர்ந்து, சோனு பிஷ்னோய் மற்றும் அனுஜ் தாபன் ஆகியோர் இவர்களுக்கு ஆயுத்தங்களை விநியோகித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதானார்கள்.
இந்நிலையில் மும்பை காவல்துறை தலைமையகத்தில் விசாரணை காவலில் இருந்த 32 வயதான அனுஜ் தாபன் தற்கொலைக்கு முயன்றதாக கூறி உடனடியாக அருகில் இருந்து ஜிடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரை சோதித்ததில் ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில்,"இந்த சம்பவம் காவல்துறை தலைமையகத்தின் முதல் தளத்தில் உள்ள லாக்கப்பில் இருக்கும் பாத்ரூமில் காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது" என்றனர். மேலும், இதுகுறித்து பல்வேறு தகவல்களும் போலீசார் தரப்பில் இருந்து வெளியாகி உள்ளது. சல்மான் கான் வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் வாக்குமூலத்திற்காக அழைத்துச்செல்லப்பட்டனர்.
அப்போது அங்கிருந்த சிறையில் பல்வேறு வழக்குகளுடன் தொடர்புடைய வேறு 10 குற்றவாளிகளுடன் தாபன் அடைக்கப்பட்டுள்ளார்.
அப்போது, காலை 11 மணியளவில் பாத்ரூமுக்கு அவர் சென்றதாக கூறப்படும் நிலையில், அங்குதான் அவர் தற்கொலை செய்தார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், அவரின் தற்கொலைக்கான பின்னணி குறித்து தெளிவாக தெரியவில்லை எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த வாரம் பஞ்சாப் மாநிலத்தில் அனுஜ் தாபனை கைது செய்துள்ளனர்.
குறிப்பாக, போலீசார் காவலில் ஒரு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தாலும் அது கொலை வழக்காகவே பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த கொலை வழக்கை சிஐடி காவல்துறையினர் கையில் எடுப்பார்கள் என்றும் இவர்கள் அந்த காவல் நிலையத்தில் இருக்கும் அத்தனை போலீசாரிடமும் விசாரணை செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலும் சிறையில் தற்கொலைக்கு முயல்வோர், அவர்களின் உடைகளில் இருக்கும் நாடாக்களை பயன்படுத்துவார்கள். லாக்கப்பை பாதுகாக்கும் காவலர்கள் சிறைவாசிகள் தப்பிக்காமல் இருக்கிறார்களா, தற்கொலைக்கு முயற்சிக்கிறார்களா ஆகியவற்றை உறுதி செய்வதே அவர்களின் பணியாகும் என்றும் கூறப்படுகிறது.
கடத்தல், கொலை, போதைப்பொருள்களை எல்லை தாண்டி கடத்துதல், சட்ட விரோத மதுபான கடத்தல், அதிநவீன ஆயுத கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக தேசிய விசாரணை முகமையால் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் என்பவருடன் இந்த வழக்கில் கைதான நால்வருக்கும் தொடர்பிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | வரலாறு படைத்த ஜிஎஸ்டி வசூல்... ஏப்ரலில் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ