மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீப்பிடித்தலில், இதுவரை ஆறு பேர் உயிரிழந்து உள்ளனர். 50-க்கு அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை 147 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
#UPDATE Death toll rises to 6 in the fire that broke out in ESIC Kamgar hospital in Andheri, Mumbai. 147 people have been rescued till now. https://t.co/bCSbsAOxHZ
— ANI (@ANI) December 17, 2018
மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீப்பிடித்தலில் இருவர் உயிரிழந்து உள்ளனர். 40 பேர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது.
#UPDATE Death toll rises to two in the fire that broke out in ESIC Kamgar hospital in Andheri,Mumbai https://t.co/bTrum5u1sI
— ANI (@ANI) December 17, 2018
இன்று மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீப்பிடித்ததால், அங்கு பெரும் பரபரபப்பு ஏற்ப்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 47 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
தீயை அணைக்கும் பணியில் தீ அணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது. தீ விபத்து ஏற்ப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 10 தீ அணைப்பு வாகனம் ஈடுபட்டு உள்ளன. அவரச உதவிக்காக 16 ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு மீட்பு வாகனம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
Mumbai: 1 person has died in the fire that broke out at ESIC Kamgar Hospital in Andheri earlier today. 47 persons rescued till now. Further rescue operation underway. 10 fire tenders conducting firefighting operations. 1 Rescue van, 16 ambulances also present pic.twitter.com/pknta0DH4l
— ANI (@ANI) December 17, 2018