தனது தளத்தில் போடப்படும் பதிவுகளுக்கு பேஸ்புக் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

பாதிக்கப்பட்டவர்களின் குரலாக இருப்பதில் சமூக ஊடகங்கள் மிக முக்கிய பங்கு வகித்தாலும், சில சமயங்களில், வன்முறையை தூண்டும் பதிவுகள், சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் பதிவுகளுக்கான தளமாகவும் அமைந்துவிடுகிறது 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 9, 2021, 01:00 PM IST
  • சமூக ஊடக தளங்களில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்
  • பேஸ்புக் இந்தியா நிர்வாக இயக்குநர் அஜித் மோகனுக்கு, டெல்லி சட்டப்பேரவை நல்லிணக்க குழு நோட்டீஸ் அனுப்பியது
தனது தளத்தில் போடப்படும் பதிவுகளுக்கு பேஸ்புக் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம் title=

சமூக வலைதளங்கள் (Social Media) மிகவும் சக்திவாய்ந்த ஊடகங்களாக, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஊடகங்களாக உள்ள நிலையில்,  சமூக ஊடக தளங்களில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு,  சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குரலாக இருப்பதில் சமூக ஊடகங்கள் மிக முக்கிய பங்கு வகித்தாலும், சில சமயங்களில், வன்முறையை தூண்டும் பதிவுகள், சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் பதிவுகளுக்கான தளமாகவும் அமைந்துவிடுகிறது என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். 

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க  வேண்டும்  என பேஸ்புக் இந்தியா (Facebook) நிர்வாக இயக்குநர் அஜித் மோகனுக்கு, டெல்லி சட்டப்பேரவை நல்லிணக்க குழு நோட்டீஸ் அனுப்பியது.
 
அந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் அஜித் மோகன் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், நோட்டீஸை ரத்து செய்ய முடியாது என மறுத்த, உச்ச நீதிமன்றம், 27 கோடி பயனாளர்களை கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம் என  கூறியது.

ALSO READ | விரிவான ஆலோசனைக்கு பின் உருவானது புதிய ஐடி விதிகள்: ஐநாவில் இந்தியா

வழக்கு விசாரணையில், பேஸ்புக் தளத்தில் சமூக நல்லிணக்கம், அமைதியை குலைக்கும் பதிவுகளால் ஏற்படும் பிரச்னைகளுக்கு பேஸ்புக் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர். பிரச்சனையை ஏற்படும், சர்ச்சைக்குரிய பதிவுகள் தொடர்பாக சமூக ஊடக பிரதிநிதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும் அதிகாரம் டெல்லி சட்டப்பேரவைக்கும் அதன் குழுவுக்கும் உள்ளது என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

பேஸ்புக் தளத்தில் 27 கோடி பயனர்கள் உள்ள நிலையில், பேஸ்புக் நிறுவனம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ALSO READ | Russia: பேஸ்புக், டெலிகிராம் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தது ரஷ்ய நீதிமன்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News