பல் வளராததற்கு பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறுவன்!

பல்வேறு பிரச்சனைகளுக்காக முதல்வர்,பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதி பார்த்திருப்போம்.ஆனால் இங்கு இரு சிறுவர்கள் எழுதிய கடிதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 30, 2021, 03:23 PM IST
பல் வளராததற்கு பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறுவன்! title=

அசாம் :  பல்வேறு பிரச்சனைகளுக்காக முதல்வர்,பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதி பார்த்திருப்போம்.ஆனால் இங்கு இரு சிறுவர்கள் எழுதிய கடிதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சகோதரர்கள் ரிஸ்வான் (6) மற்றும் ஆரியன் (5). இவர்களுக்கு மேலே முன்பற்கள் வளராமல் உள்ளன.  இதனால் சுவையான உணவுகள் உண்பதில் இச்சிறுவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பற்கள் வளர வேண்டும் என யோசித்தவர்களுக்கு புதுமையான யோசனை கிடைத்துள்ளது.அண்ணன் ரிஸ்வான் அம்மாநில முதல்வர் ஹிமந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

chidl

அந்த கடிதத்தில், "அன்புள்ள ஹிமந்தா அங்கிள், எனக்கு 5 பற்கள் வளரவில்லை. இதனால் எனக்கு பிடித்த உணவுகளை உண்பதில் சிரமம் ஏற்படுகிறது. தயவுசெய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஹிமந்தா அங்கிள்" என எழுதியுள்ளார்.  அடுத்து தம்பி ஆரியன் ஒருபடி மேலே போய் பிரதமர் மோடிக்கே கடிதம் எழுதியுள்ளார். அதில் கடிதத்தில், "அன்புள்ள மோடி ஜி, எனக்கு 3 பற்கள் வளரவில்லை. இதனால் பிடித்தமான உணவுகளை மெல்லும்போது சிரமப்படுகிறேன்.

letter

இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மோடி ஜி" என எழுதியுள்ளார்.இந்த கடிதங்களை சிறுவர்களின் மாமா ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.இது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  இதற்கு பலரும் கலகலப்பான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த கடிதங்கள் பலரையும் கலகலப்பூட்டியுள்ளது.இதனை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்துக், கமெண்ட் அடித்தும் வருகின்றனர்.

ALSO READ அரசுப்பள்ளிகளில் "பிஎம்-போஜன்" பெயரில் மதிய உணவு - மத்திய அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News