ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேலின் வெற்றிடம் நமக்கு பெரும் இழப்பு: பிரதமர் மோடி

உர்ஜித் படேல் தலைமையின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி நிதி ஸ்திரத்தன்மை பெற்றது. அவரின் வெற்றிடம் நமக்கு பெரும் இழப்பு என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 10, 2018, 06:30 PM IST
ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேலின் வெற்றிடம் நமக்கு பெரும் இழப்பு: பிரதமர் மோடி title=

வராகடன் பிரச்னையில் சிக்கி தவித்து வரும் வங்கிகளிடம் காட்டப்பட்டு வரும் கெடுபிடியை ரிசர்வ் வங்கி தளர்த்த வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் உள்ள பல லட்சம் கோடி ரூபாயை நாட்டின் வளர்ச்சி பணிகளுக்காக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசு கூறியது. இதனையடுத்து மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நிதி விவகாரத்தில் மோதல் வலுத்து வருகிறது என தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில், கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரல் ஆசாரியா அவர்கள் "ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மதிக்காத அரசுகள், மிக விரைவில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்" என விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்தால் ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

கடந்த ஒருமாதமாக உர்ஜித் படேல் தனது பதிவியினை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இன்று திடிரெனே இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஊர்ஜித் பட்டேல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், உர்ஜீத் பட்டேல் ராஜினாமா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, 

"டாக்டர் உர்ஜீத் பட்டேல் மிக உயர்ந்த திறமை உடைய ஒரு பொருளாதார நிபுணர் ஆவார். அவர் வங்கியியல் முறையை ஒழுங்கமைத்து வங்கியின் ஒழுங்குமுறையை உறுதிப்படுத்தினார். அவரது தலைமையின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி நிதி ஸ்திரத்தன்மை பெற்றது.

 

டாக்டர். உஜ்ஜிதே படேல், குற்றமற்ற நேர்மையானவர். அவர் ரிசர்வ் வங்கியில் துணை கவர்னர் மற்றும் ஆளுநராக என 6 வருடங்கள் பணியாற்றி உள்ளார். வல்லமை வாய்ந்த அவரின் வெற்றிடம் நமக்கு பெரும் இழப்பு" எனக் கூறியுள்ளார்.

 

 

Trending News