வந்தே பாரத் ரயில் கடந்த இரண்டு நாள்களாகவே தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுவந்தது. குஜராத் - மகாராஷ்டிரா இடையே இயக்கப்பட்ட அந்த ரயில் நேற்று முன்தினம் எருமை மாடுகளால் விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, நேற்று மாலை பசுமாடு ஒன்று அதே ரயிலில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
கடந்த செப்.30ஆம் தேதி இந்த ரயிலை பிரதமர் மோடி, குஜராத்த்தில் கொடியசைத்து தொடங்கிவைத்தார். சேவையை தொடங்கி ஒரு வாரத்திதில் அடுத்தடுத்து இரண்டு விபத்துகளை அந்த வந்தே பாரத் ரயில் சந்தித்தது. அந்த வகையில், தொடர்ந்து மூன்றாவது நாளகா இன்றும், வந்தே பாரத் ரயில் மீண்டும் தலைப்புச்செய்தியாகியுள்ளது.
ஆனால், இம்முறை குஜராத்-மகாராஷ்டிரா இடையேயான ரயில் இல்லை, டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் வந்தே பாரத் ரயில்தான் தற்போது பேசுப்பொருளாகியுள்ளது. இம்முறை விபத்து நிகழவில்லை என்றாலும், அந்த ரயிலின் சக்கரம் பழுதாகியுள்ளது.
C8 ரயில் பெட்டியின் சக்கரம் பழுதடைந்தததால், ரயில் நகர்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து புறப்பட்ட ரயில், உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் என்ற பகுதியில் பழுதாகியுள்ளது. ஏறத்தாழ 5 மணிநேரமாக பழுது காரணமாக ரயில் நகரவில்லை என சமூக வலைதளத்தில் ஒரு ட்விட்டர் பயனாளர் பதிவிட்டுள்ளார்.
The wheels of the Delhi-Varanasi Vande Bharat Express jammed, and the train was stranded on the track for 5 hours near Bulandshahr in UP. When the efforts to repair failed, a Shatabdi express was arranged from Delhi to take passengers to Varanasi.
Dainik Bhaskar report. pic.twitter.com/4DnF495mQS— Ravi Nair (@t_d_h_nair) October 8, 2022
மேலும் படிக்க | நேற்று எருமை மாடு; இன்று பசு மாடு - 'வந்தே பாரத்... விடாது விபத்து..'
தொடர்ந்து, இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "வாரணாசி வந்தே பாரத் ரயில், உத்தரப் பிரதேசத்தின் டான்கவுர் மற்றும் வைர் நிலையங்களுக்கு இடையே பழுதானது. C8 பெட்டியின் இழுவை மோட்டாரில் கோளாறு ஏற்பட்டது. வட மத்திய ரயில்வேயை சேர்ந்த குழுவின் உதவியுடன் பழுது சீர்செய்யப்பட்டது.
இருப்பினும், சிறிது பழுது இருந்ததால், வெறும் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் குர்ஜா ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. வந்தே பாரத் ரயிலின் பழுதான பெட்டிக்கான மாற்று ரயில் பெட்டி டெல்லியில் இருந்து குர்ஜாவிற்கு காலை 10.45 மணிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு பயணிகள் சதாப்தி ரயிலுக்கு மாற்றப்பட்டனர்.
well, for the third time in a row today! so apparently some motor component has caught now fire.#vandebharattrain #vandebharat #bandebharatexpress #IRCTC pic.twitter.com/fGnub0ZQgv
— Surbhi Saraswat (@Surbhi_yuvi) October 8, 2022
வடக்கு ரயில்வே, வடமத்திய ரயில்வேயை சேர்ந்த 6 அதிகாரிகள் குர்ஜா சென்று ஆய்வு செய்தனர். மேலும், பழுது குறித்த முழுமையான விவரம், ரயில் பெட்டி பராமரிப்பு கிடங்கிற்கு எடுத்துச்செல்லப்பட்டு பரிசோதித்த பின்னர்தான் தெரிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளது.
டெல்லியில் இருந்து வாரணாசிக்கு கடந்த மூன்றாண்டுக்கும் மேலாக இயங்கிவருகிறது. 2019ஆம் ஆண்டு, பிப். 15ஆம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து கொடியசைத்து தொங்கிவைத்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என கடந்தாண்டு சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். இதுபோன்று மொத்தம் 75 ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் உட்சபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ., என்றும், 52 நொடிகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை அதனால் எட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலால் வேகத்தை சீராக குறைக்கவும் முடியும் அதிகரிக்கவும் முடியும் என்பதால், பயண நேரம் வெகுவாக குறைகிறது. உதாரணமாக, சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமான ரயில்களில் செல்ல எட்டு மணிநேரமாகும். ஆனால், வந்தே பாரத் ரயில், சென்னை - மதுரை செல்லும் மற்ற அனைத்து ரயில்களையும் விட 40-50% (சுமார் 4 மணிநேரம்) விரைவாக சென்றுவிடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ