புதுடெல்லி: வாகன ஸ்கிராப்பிங் திட்டம் நாளை (ஏப்ரல் 1 2022) முதல் அமலுக்கு வருகிறது. அமலாகும் புதிய விதிகளின்படி பழைய வாகனங்களை மாற்றுவதற்கு ஊக்கப்படுத்தப்படும்.
இந்த புதிய ஸ்கிராப் கொள்கை சாலையில் பழுதடைந்த வாகனங்கள் செல்வதை தடுப்பதோடு, ஆட்டோமொபைல் தொழில்துறைக்கும் ஊக்கமளிக்கும். இதனுடன், தொழிலில் முதலீடு மற்றும் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.
ஸ்கிராப் கொள்கையின் கீழ், 2023 முதல், அனைத்து வகையான கனரக வர்த்தக வாகனங்களும் கட்டாய உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மறுபுறம், இந்தக் கொள்கை தனியார் மற்றும் பிற குழு வாகனங்களுக்கு ஜூன் 2024 முதல் பொருந்தும்.
மேலும் படிக்க | பழைய வாகனங்களை மாற்றுவதற்கான ஊக்க திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
ஸ்கிராப் கொள்கை என்றால் என்ன?
ஸ்க்ராப் பாலிசியின்படி, நாட்டில் தற்போது பழையதாகிவிட்ட வாகனங்கள் தகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த சோதனையில் வாகனங்களின் இன்ஜின் நிலை, மாசு நிலை மற்றும் எரிபொருள் திறன், பாதுகாப்பு நிலை போன்ற பல அம்சங்கள் சரிபார்க்கப்படும். சோதனையில் தோல்வியடைந்தால் வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்படும். அத்தகைய வாகனங்கள் ஸ்கிராப்புக்கு அனுப்பப்படும்.
வாகன ஸ்கிராப்பிங் கொள்கையின்படி (Vehicle Scrapping Policy), 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வணிக வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான தனியார் பயணிகள் வாகனங்கள் இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
வாகனங்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றால், இந்த வாகனங்களுக்கு பதிலாக IC இன்ஜின்கள் பொருத்தப்பட்டு சில நாட்களுக்கு இயக்க அனுமதிக்கப்படும்.
மேலும் படிக்க | OnePlus-ன் புதிய மாடல் விலை என்ன?
ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி
ஸ்க்ராப் பாலிசியில், தகுதி சோதனையின் கீழ் பதிவு செய்ய www.ppe.nsws.gov.in/scrappagepolicy என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். தனிநபர், நிறுவனம், அறக்கட்டளை என அனைத்து தரப்ப்பினரும் வாகனங்களை பரிசோதனை செய்வதற்கு விண்ணப்பிக்கலாம்.
வாகனத் தகுதி சான்றிதழ் உள்ளிட்ட பிற முக்கிய ஆவணங்களையும், 100 ரூபாய் முத்திரைத்தாளில் பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உடற்தகுதி சோதனை தோல்வியடைந்தால் என்ன நடக்கும்?
வாகன ஸ்கிராப் கொள்கை என்பது ஒரு தன்னார்வ வாகன நவீனமயமாக்கல் திட்டம் (VVMP). அத்தகைய சூழ்நிலையில், வாகனம் உடற்தகுதி தேர்வில் தோல்வியுற்றால், அதன் காரை நாடு முழுவதும் 60-70 பதிவு செய்யப்பட்ட ஸ்கிராப் வசதிகளில் டெபாசிட் செய்ய வேண்டும். தேர்வில் தோல்வியடையும் வாகனங்கள் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ஸ்கிராப் சான்றிதழ் பெறும்.
இந்த ஸ்கிராப் சான்றிதழில், பழைய வாகனத்தின் ஸ்கிராப் மதிப்பில் இருந்து புதிய வாகனத்திற்கு தள்ளுபடி கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் போது, எக்ஸ்ஷோரூம் விலையில் 5 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, புதிய வாகனத்திற்கு பதிவு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. மாநில அரசுகள் தனியார் வாகனங்களுக்கு 25 சதவீதம் வரையிலும், வணிக வாகனங்களுக்கு 15 சதவீதம் வரையிலும் சாலை வரி தள்ளுபடி அளிக்கலாம்.
மேலும் படிக்க | Tips & Tricks: போலி பான் கார்டை கண்டறிவது மிகவும் சுலபம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR