தொழில் அதிபர் விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது!
இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி (ரூ. 9,000) கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், 2016 ஆம் ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதன்படி, விஜய் மல்லையாவிடம் கடன் பாக்கியை வசூலித்து தரும்படியும், விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் எனவும் 13 இந்திய வங்கிகள் மற்றும் மத்திய அரசு சார்பில் இங்கிலாந்து வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விஜய் மல்லையா வாங்கி திரும்ப செலுத்தாத கடனுக்காக அவரது சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள பணமோசடிகளை தடுக்கும் சிறப்பு நீதிமன்றதை அமலாக்கத்துறை நாடியது.
The hearing in Special PMLA court on the confiscation of the properties of Vijay Mallya will be held on 5th February. Special PMLA court has declared Vijay Mallya a fugitive economic offender. (file pic) pic.twitter.com/xOfkRDTYt5
— ANI (@ANI) January 5, 2019
இந்த நிலையில் விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும் மேல்முறையீடு செய்யும் வரை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி என்று அறிவித்ததை நிறுத்தி வைக்குமாறு விஜய் மல்லையா தரப்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதன் மூலம் கடனுக்கு ஈடாக விஜய் மல்லையாவின் சொத்துகளை அரசு எளிதாக பறிமுதல் செய்ய முடியும்.