கொரோனா பரவலை தொடர்ந்து மார்ச் மாதம் முழுமையான லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.
பின்னர் படிப்படியாக நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்கில், அன்லாக் நடவடிக்கைகள் ஜூன் மாதம் தொடங்கின.
தற்போது நான்காம் கட்ட அன்லாக் நடவடிக்கைகள் செப்டெம்பர் 1ம் தேதி தொடங்குகின்றன. இதில் சினிமா அரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என தக்வல்கள் வெளியாகியுள்ளன.
நான்காம் கட்ட அன்லாக்கில், டெல்லியில் தடைசெய்யப்பட்ட மெட்ரோ சேவைகள் 15 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் மீண்டும் தொடங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல மாநிலங்களில் லாக்டவுன் இன்னும் அமலில் உள்ளது. சில மாநிலங்களில் வரா இறுதியில், லாக்டவுன் அமலில் உள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 1 முதல், இந்தியாவில் நான்காவது கட்ட அன்லாக் நடைமுறை தொடங்குகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றுநோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டினாலும். செப்டம்பர் மாதத்தில் சில தளர்வுகள் அனுமதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாதத்தில் தனியாக உள்ள சினிமா அரங்குகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மால்களில் உள்ள மல்டிபிளெக்ஸ் இப்போது திறக்கப்படாது. இன்று காலை, தக்வல் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர், திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் சூட்டிங்குகள் குறித்த வழிமுறைகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ சேவைகள்
சோதனை அடிப்படையில் டெல்லியில் தடைசெய்யப்பட்ட மெட்ரோ சேவைகள் செப்டம்பர் மாதத்தில் 15 நாட்களுக்கு மீண்டும் தொடங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கோச்சில் 50 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
கல்வி நிறுவனங்கள்
ஆகஸ்ட் கடைசி வாரத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முடிவை எடுப்பதாக பல மாநில அரசுகள் அறிவித்துள்ள நிலையில், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க மத்திய அர்சௌ அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | திரைப்படம், டிவி சீரியல் நடிகர்கள், பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி..!!!
சர்வதேச விமானங்கள்
சர்வதேச விமான சேவையில் வழக்கமான சேவைகள் தொடங்காது. வந்தே பாரத் மிஷனின் கீழ் மேலும் விமானங்கள் இயக்கப்படும்ம். சர்வதேச விமான போக்குவரத்து தொடர்பாக மேலும் நாடுகளுடன் ஏர் பப்பில் போன்ற தடையற்ற பாதுகாப்பாஅன் விமான சேவை குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்.
சனிக்கிழமையன்று, மத்திய உள்துறை அமைச்சகம் ,மாநில அரசுகளுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்தில் உள்ள தடைகள், பொருளாதார நடவடிக்கையை பாதிக்கும் என்பதால், இது தொடர்பான அனைத்து தடைகளையும் நீக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ALSO READ | புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம்: அரசு