தேர்தலை பொருத்த வரை வாக்குப்பதிவின் போது மட்டுமல்ல, வாக்கு எண்ணும் போதும் ஒவ்வொரு வேட்பாளர்களின் சுவாசம் வேகமாக துடிப்பது என்பது வழக்கமான ஒன்று தான். சிலர் லட்சக்கணக்கிலும், பலர் ஆயிரம் கணக்கிலும், ஒருசிலர் ஒற்றை, இரட்டை இலக்குகளும் வெற்றி பெறுவது உண்டு. எத்தனை ஓட்டு வாங்கினார்கள் என்பதை விட, யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே கொண்டாடப்படுவார்கள்.
அப்படி ஒரு சம்பவம் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் நடந்துள்ளது. அதாவது மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணிக் கட்சியின் வேட்பாளர் லால்சந்தாமா ரால்டே பெரும் அதிர்டசாலி ஆனார்.
மிசோரம் மாநிலத்தின் துய்வால் தொகுதியில் மிசோ தேசிய முன்னணிக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட லால்சந்தாமா ரால்டே, காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக வெறும் மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற ஓட்டு 5207. அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 5204 ஓட்டுகளை பெற்றார். நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை பெற்றார் லால்சந்தாமா ரால்டே.
மிசோரம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 21 இடங்களின் பெரும்பான்மை வேண்டும் என்ற நிலையில், மிசோ தேசிய முன்னணிக் கட்சி 26 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும், மற்றவர்கள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மிசோரம் மாநில தேர்தலில் மிசோ தேசிய முன்னணிக் கட்சிக்கு 37.6 சதவிகித வாக்குகளை பெற்றது, அதேவேளையில் காங்கிரஸ் 30.2 சதவிகித வாக்குகளை பெற்றது.