Assembly Election Result Latest News: ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஹரியானாவின் 90 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8:00 மணிக்கு தொடங்குகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஹரியானா சட்டசபைத் தேர்தலில் 1031 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 464 பேர் சுயேச்சைகள், 101 பேர் பெண்கள். இந்த சட்டசபைத் தேர்தலில் 67.90% வாக்குகள் பதிவான நிலையில், பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பாரதிய ஜனதா கட்சி அறுதி பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று முதலமைச்சர் நயப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜம்முகாஷ்மீர் சட்டப்பேரவையின் 90 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்த நிலையில், அதில் பதிவான வாக்குகளும் காலை 8:00 மணிக்கு எண்ணப்படுகின்றன. 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் தேர்தலான இதில் காங்கிரஸ் கட்சியும் தேசிய மாநாட்டுக் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளன.
காங்கிரஸ் கூட்டணிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 20 மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
மேலும் படிக்க - காங்கிரஸ் கட்சி காஷ்மீர், ஹரியானாவில் ஆட்சியை பிடிக்கும் என கணிப்பு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ