மகேந்திர சிங் தோனி, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ மூலம் தான் ஓய்வு பெறுவதை உறுதிப்படுத்தி, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்
இந்த நேரத்தில் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனியின் சர்வதேச அளவிலான சில சாதனைகளை பார்க்கலாம்
கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள தோனி எல்லா காலத்திலும் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக, கேப்டனாக இருந்திருக்கிறார்.
தல மகேந்திர சிங் தோனியின் சில சாதனைகளை பார்க்கலாம்...
முன்னாள் இந்திய கேப்டன் சனிக்கிழமை மாலை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.அவர் 16 ஆண்டு காலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். தோனி ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து, 2014 டிசம்பரில் ஓய்வு பெற்றார். இருப்பினும், தோனி, ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ( IPL Chennai Super Kings) தொடர்ந்து விளையாடுவார். ஐ பி எல் போட்டியின் 13 வது போட்டித் தொடர் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும்.
மேலும் படிக்க | தல MS Dhoni வழி நடக்கும் சுரேஷ் ரெய்னா.. தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்..!!!
மான்செஸ்டரில் நியூசிலாந்திற்கு எதிரான 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்த் இந்தியா வென்றது. அது தான் அவர் விளையாடி கடைசி சர்வதேச போட்டியாகும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன தோனி பிறகு எந்த போட்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை.
1. மூன்று ஐ.சி.சி போட்டிகளில் வென்ற ஒரே கேப்டன்
2007 ஆம் ஆண்டில் உலக T20 போட்டி தொடங்கியதில் இருந்தே, எம்.எஸ். தோனி இந்தியாவை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றார் எனக் கூறலாம். அதைத் தொடர்ந்து 2011 ல் ஒருநாள் உலகக் கோப்பையை பெற்றுத் தந்தார், பின்னர் 2013 ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை இந்தியா அணி இவரது தலைமையில் வென்றது. இதன் மூலம் மூன்று ஐசிசி போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை அடைகிறார்.
2. பெரும்பாலான சர்வதேச போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்
தோனி இந்தியா பங்கேற்ற 332 சர்வதேச போட்டிகளில், அதாவது 200 ஒருநாள், 60 டெஸ்ட் மற்றும் 72 T20 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். இது உலக சாதனை. இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 324 சர்வதேச போட்டிகளில் அணி கேப்டனாக இருந்துள்ளார்.
3. ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக பெரும்பாலான இறுதி போட்டி வெற்றிகள்
பல நாடுகள் பங்கேற்கும் சர்வதேச போட்டித் தொடர்களில், தோனி, இந்தியாவை 6 முறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார், அதில் இந்தியா 4 போட்டிகளில் வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக, தோனி தலைமையில் இந்தியா 110 ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ளது. இது மூலம் உலக அளவில் இரண்டாவது நிலையில் உள்ளார். 165 ஒருநாள் போட்டிகளில் வென்றதன் மூலம் பாயிண்டிங் இந்த சாதனையில் முதல் இடத்தில் உள்ளார்.
மேலும் படிக்க | கணவர் MS Dhoniயின் சர்வதேச கிரிக்கெட் ஓய்வுக்கு சாக்ஷியின் எதிர்வினை...
ஒருநாள் போட்டிகளில் அதிக அளவில் நாட் அவுட்
எம்.எஸ். தோனி, 84 ஒருநாள் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்த கிரிக்கெட் வீரர் ஆவார். இது மீண்டும் உலக சாதனை. இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக வருவது, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷான் பொல்லாக், 72 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்தார். கூடுதலாக, இந்த போட்டிகளில் பெரும்பாலானவற்றில் இந்தியா வென்றுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அளவில் ஸ்டம்பிங்
எம்.எஸ். தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக எண்ணிக்கையிலான ஸ்டம்பிங் செய்து சாதனை படைத்துள்ளார். 350 போட்டிகளில், தோனி 123 ஸ்டம்பிங் செய்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில், 100க்கு மேல் ஸ்டம்பிங் செய்த ஒரே விக்கெட் கீப்பர் ஆவார்.