அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் சிலை அமைக்க உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
குஜராத்தின் நர்மதை நதிக்கரையில் 182 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் சிலையை, பிரதமர் மோடி கடந்த 31-ம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சரயு நதிக்கரையில் பிரம்மாண்டமான ராமர் சிலை ஒன்றை அமைக்க மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து உ.பி. தகவல் துறை கூடுதல் தலைமை செயலாளர் கூறுகையில்:-
அயோத்தியில் சராயு நதிக்கரையில் 151 மீ உயரத்தில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்க முதல்வர் முடிவுசெய்துள்ளார். இதற்கான அறிவி்ப்பை வரும் 6-ம் தேதி உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிடுகிறார். தற்போது திட்ட மதிப்பு குறித்து சுற்றுலா மற்றும கலாச்சாரத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. என்றார்.