ராஜஸ்தானில் 1998-ம் ஆண்டு படப்பிடிப்பின் போது அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சிக்கிய நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் மற்றும் நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, சிறைச்சாலை சென்ற சல்மான்கானுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் அவரை சிறை வார்டு 2-ல் அடைக்கப்பட்டு உள்ளார். பின்னர் அவருக்கு கைதி எண் 106 வழங்கப்பட்டது. அவர் டைக்கபட்டுள்ள சிறை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக சல்மானுக்கு சிறை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று சல்மான் கான் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்து இருந்தார். சல்மான்கானின் ஜாமீன் மனு மீதான உத்தரவை நாளைக்கு ஒத்திவைத்தது ஜோத்பூர் நீதிமன்றம்.
Jodhpur Court reserves order till tomorrow on #SalmanKhan's bail plea #BlackBuckPoachingCase pic.twitter.com/WADiYarSRg
— ANI (@ANI) April 6, 2018