அகவிலைப்படி உயர்வு: மத்திய ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது!! அவர்களது அகவிலைப்படி பெரிய அளவில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. இருப்பினும், அகவிலைப்படியில் அதிகரிப்பு இருக்கும், ஆனால், நினைத்த அளவுக்கு இருக்காது!! மத்திய ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் பின்னடைவை சந்தித்துள்ளன. ஏஐசிபிஐ குறியீட்டின் எண்கள் வந்துவிட்டன. இந்த முறை இந்த எண்ணிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால், 4 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட அகவிலைப்படி தற்போது அந்த அளவிற்கு உயராது. அதைவிட குறைவான அதிகரிப்பே இருக்கும் என்பது தெளிவாகிறது.
அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும்?
முன்னதாக அகவிலைப்படி உயர்வு 4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நவம்பரில் ஏஐசிபிஐ குறியீட்டு எண்ணிக்கை அதிகரித்தபோது இந்த நிலை நிலவியது. இப்போது இந்த எண்ணிக்கை அக்டோபர் மாத எண்ணிக்கையிலேயே நிலையாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மத்திய ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி கிடைத்துள்ளது. நவம்பர் 2022க்கான ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கை 132.5 ஆக உள்ளது. அக்டோபரிலும் இந்த எண்ணிக்கை 132.5 ஆகவே இருந்தது. அடுத்தது இப்போது டிசம்பர் எண் வர வேண்டும். ஆனால், அந்த எண்ணிக்கை 133.5ஐ எட்டும் என்ற நம்பிக்கை குறைவாகவே உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அகவிலைப்படியை அரசாங்கம் 4 சதவீதம் உயர்த்துவது சாத்தியமில்லை. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் மட்டுமே அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என தோன்றுகிறது.
அகவிலைப்படி அதிகரிப்பு எப்போது அறிவிக்கப்படும்?
அகவிலைப்படிக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும். இந்த அறிவிப்பு மார்ச் 1, 2023 அன்று வெளிவரக்கூடும் என்று ஜீ பிசினஸ் ஏற்கனவே கூறியுள்ளது. ஹோலி பண்டிகை மார்ச் 8 அன்று வருகிறது. இதற்கு முன்னதாக வரும் 1ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நாளில் முடிவு எடுக்கப்படலாம். அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படலாம், ஆனால் இது ஜனவரி 2023 முதல் பொருந்தும். இந்தக் காலத்துக்கான பணம் மார்ச் மாத சம்பளத்துடன் சேர்த்து வரவு வைக்கப்படும். அதாவது ஊழியர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரு மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: உறுதியானது டிஏ ஹைக், ஊதிய உயர்வின் முழு கணக்கீடு இதோ
அகவிலைப்படி எவ்வளவு கிடைக்கும், சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கருதினால், இப்போது ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கலாம். இது நடந்தால், மொத்த அகவிலைப்படி 41 சதவீதமாக உயரும். தற்போது ஊழியர்களுக்கு 38 சதவீத ஊதியம் வழங்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் அதாவது அடிப்படை சம்பளம் 18000 ரூபாயாக இருந்தால், தற்போது அவர் மாதம் 6840 ரூபாய் பெறுவார். 41 சதவீதத்தில், அவரது அகவிலைப்படி ரூ.7380ஐ எட்டும். மொத்த வித்தியாசத்தைப் பற்றி பேசினால், டிஏவில் ரூ.540 உயர்வு இருக்கும்.
பணவீக்கம் எங்கு அதிகரித்தது?
1- உணவு மற்றும் பானங்களின் எண்ணிக்கையில் சிறிது சரிவு ஏற்பட்டுள்ளது. அக்டோபரில் 133.9 புள்ளிகளாக இருந்த இந்த எண்ணிக்கை நவம்பரில் 133.3 புள்ளிகளாக குறைந்துள்ளது.
2- பான், சுப்பாரி, புகையிலை பொருட்களின் பணவீக்கம் சற்று அதிகரித்துள்ளது. இது அக்டோபரில் 148.5 புள்ளிகளாக இருந்தது. நவம்பரில் இந்த எண்ணிக்கை 148.7 ஆக உள்ளது.
3- ஆடைகள் மற்றும் காலணிகளின் விஷயத்திலும் சிறிது அதிகரிப்பு காணப்படுகிறது. அக்டோபரில் இந்த எண்ணிக்கை 131.9 ஆக இருந்தது, தற்போது 132.3 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
4- வீட்டுவசதி விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை. அக்டோபரில் இந்த எண்ணிக்கை 121.0 ஆக இருந்தது, நவம்பரில் அதே நிலை உள்ளது.
5- எரிபொருள் பணவீக்கத்தில் அதிகரிப்பு இல்லை. இந்த எண்ணிக்கை அக்டோபரில் இருந்த 177.8 புள்ளிகளில் நிலையாக உள்ளது.
6- இதர பணவீக்கத்தில் சிறிது அதிகரிப்பு காணப்படுகிறது. இது 128.4ல் இருந்து 129.1 ஆக அதிகரித்துள்ளது.
நவம்பரில் குழு குறியீட்டின் எண்ணிக்கை அக்டோபர் மட்டத்திலேயே 132.5 புள்ளிகளாக உள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: அடிப்படை ஊதியத்தில் ஏற்றம், மாத சம்பளத்தில் பம்பர் உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ