இந்தியாவின் முதல் 'ஹம்போல்டுட்' பென்குயின் நேற்று இரவு 8:02 மணியளவில் மும்பையில் உள்ள 'பைகுல்லா' உயிரியல் பூங்காவில் பிறந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் தென்கொரிய தலைநகர் சியோல் நகரில் இருந்து, 8 பென்குயின்கள், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள 'பைகுல்லா' உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டது.
இந்தியாவில் வேறு எந்த உயிரியல் பூங்காவிலும் பென்குயின் பறவைகள் வளர்க்கப்படவில்லை. அதன் வாழ்விடத்துக்கு ஏற்ற, 4 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட 250 சதுர அடி கொண்ட செயற்கை அமைப்பு இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் 2016ம் ஆண்டு, இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள இது 'ஹம்போல்டுட்' வகை பென்குயின் எனக் கூறப்படுகிறது.
'ஹம்போல்டுட்' வகை பென்குயின்கள். இவை தென் அமெரிக்க நாடுகளான சிலி, பெரு ஆகியவற்றில் அதிகளவில் வாழ்கின்றன. நடுத்தர வகையிலான இந்த பென் குயினின் உயரம் 55 செ.மீ., முதல் 70 செ.மீ., நீளம் வரை வளரும். இதன் எடை 5.9 கிலோ வரை இருக்கும். இதன் வாழ்நாள் 20 முதல் 25 ஆண்டுகள்.
இந்நிலையில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் முதல் 'ஹம்போல்டுட்' பென்குயின் மும்பையில் உள்ள 'பைகுல்லா' உயிரியல் இரவு 8:02 மணியளவில் பிறந்துள்ளது.
A Humboldt Penguin chick hatched out of the egg at 08.02pm on 15th August 2018. It appeared to be active and the mother was trying to feed it too:Dr. Sanjay Tripathi, Director, Veermata Jijabai Bhosale Udyan & Zoo #Mumbai pic.twitter.com/RhEB1702Mo
— ANI (@ANI) August 16, 2018