நாட்டில் உள்ள குடிமக்களுக்கு மிக முக்கிய ஆணவமாக பார்க்கப்படும் ஆதார் கார்டை வைத்து பல்வேறு மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. போலி சிம்கார்டு முதல் பண மோசடி வரை அனைத்தும் விவரம் தெரியாத மக்களை குறிவைத்து ஏமாற்றுவேலைகள் செய்யப்படுகின்றன. அதில் இருந்து மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம். அண்மையில் ஆதார் கார்டு வைத்திருந்தால்போதும் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பெறலாம் என்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த செய்தியை மக்கள் பலரும் நம்பி, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர தொடங்கினர்.
மேலும் படிக்க | குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியான அப்டேட்!..எல்பிஜி விலை விரைவில் குறையும்
அதன் உண்மை தன்மையை யாரும் தெரிந்துகொள்ளாமல் பகிர்ந்ததால், ஆதார் கார்டு மூலம் கிடைக்கும் 3 ஆயிரம் ரூபாய் பணத்தை பெறும் வழிகளை பற்றி சிந்திக்க தொடங்கினர். இந்த தகவல் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறையின் கவனத்துக்கும் சென்றது. உடனடியாக இந்த தகவலின் உண்மை தன்மையை அந்த துறை அம்பலப்படுத்தியுள்ளது. PIB Fact Check சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், இது முற்றிலும் தவறான செய்தி என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
— PIB Fact Check (@PIBFactCheck) December 20, 2022
இதுபோன்ற போலி செய்திகளுக்கு மக்கள் செவிசாய்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள PIB Fact Check, இதுபோன்ற தவறான செய்திகளுக்கு மக்கள் செவிசாய்க்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இப்படி ஒரு தொகையை அரசு வழங்குவதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. ஆம், ஆதார் அட்டைவைத்திருப்பவர்களுக்கு எல்லாம் மாதம் 3 ஆயிரம் வழங்கப்படும் என கூறப்படும் இந்த செய்தி போலியானது. இதனை விவரம் தெரியாதவர்களிடம் கூறி மோசடி செய்யவே இத்தகைய செய்திகள் உருவாக்கப்படுகின்றன. உண்மை தன்மை அறியாமல் நம்புபவர்கள் நிச்சயம் பணத்தை இழக்க நேரிடும்.
மேலும் படிக்க | சைபர் மோசடிகளை தடுக்கும் Masked Aadhaar... எளிதாக பதிவிறக்கம் செய்யும் முறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ