மேகாலயாவுக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டினரும் இப்போது அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது!!
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவுக்கு சில சிறப்பு அந்தஸ்துகள் உள்ளன. இந்த நிலையில், மேகாலயா மாநிலத்தை சேராதவர்கள், மாநிலத்தின் உள்ளே 24 மணி நேரத்திற்கு மேல் தங்கினால், முதலில் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசர சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
தேசிய மக்கள் கட்சி தலைமையிலான மேகாலயா ஜனநாயக கூட்டணி அரசு இந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசர சட்டம் உடனே அமலுக்கு வந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மேகாலயா குடியிருப்போர் பாதுகாப்பு சட்டம் 2016 ல் திருத்தம் கொண்டு வந்துள்ள மாநில அரசு, சட்ட விரோதமாக குடியேறுவதை தடுக்க சில புதிய பிரிவுகளை சேர்த்துள்ளது. இதன்படி, மாநிலத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் தங்குவோர், முன்னதாகவே மாநில அரசிடம் பெற வேண்டும். இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் தொடர்பாக துணை முதல்வர் டைசங் செய்தியாளர்களிடம் கூறுகையில்; இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. சட்டசபை கூடும் போது, அவசர சட்டம் நிறைவேற்றப்படும் என்றார். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, மேகாலயாவிலும் கூட்டணி அரசில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.