7வது ஊதியக் குழுவின் சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் அகவிலைப்படி உயர்வு பற்றி மார்ச் மாதம் அரசாங்கம் அறிவித்தது. இதற்குப் பிறகு, அடுத்த அகவிலைப்படி உயர்வை ஜூலை முதல் மோடி அரசு அமல்படுத்த உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதம் அரசு தரப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறையும் 4 சதவீத அதிகரிப்பு இருக்கும்
ஜனவரி முதல் மே வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில் அரசாங்கம் டிஏவை அறிவிக்கும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இம்முறையும், அரசு தரப்பில் இருந்து டிஏ 4 சதவீதம் உயர்த்தப்படலாம். இம்முறை புதிய ஃபார்முலா ஒன்றை அமுல்படுத்தி அரசு அகவிலைப்படியை அதிகரிக்கக்கூடும் என ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 7வது மத்திய ஊதியக் குழுவின் கீழ் ஜனவரி மாத டிஏ உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் டிஏ 42% ஆக அதிகரித்துள்ளது.
அகவிலைப்படி கணக்கிடும் முறையில் மாற்றம்
இந்த முறை தொழிலாளர் அமைச்சகம் அகவிலைப்படி கணக்கீட்டை மாற்றியுள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன. அமைச்சகம் 2016 இல் அகவிலைப்படியின் அடிப்படை ஆண்டை மாற்றி, ஊதிய விகிதக் குறியீட்டின் (WRI-Wage Rate Inde) புதிய தொடரை வெளியிட்டது. 2016=100 அடிப்படை ஆண்டுடன் கூடிய WRI இன் புதிய தொடர், அடிப்படை ஆண்டு 1963-65 -ன் பழைய தொடருக்கு பதிலாக இருக்கு என தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்தது.
கணக்கீடு எப்படி செய்யப்படுகின்றது
7வது ஊதியக் கமிஷன் அகவிலைப்படி, தற்போதைய விகிதத்தை அடிப்படை ஊதியத்துடன் பெருக்கி கணக்கிடப்படுகிறது. தற்போதைய சதவீத விகிதம் 12% ஆகும். உங்கள் அடிப்படை ஊதியம் ரூ.56,900 என்றால், அகவிலைப்படி (56,900 x12)/100 ஆக இருக்கும். அகவிலைப்படி சதவீதம் = கடந்த 12 மாதங்களில் CPI இன் சராசரி - 115.76. இப்போது, எந்த தொகை வந்தாலும், அது 115.76 ஆல் வகுக்கப்படுகிறது. இதன் மூலம் வரும் எண் 100 ஆல் பெருக்கப்படும்.
அகவிலைப்படிக்கு வரி விதிக்கப்படுமா?
அகவிலைப்படி என்பது முழுமையாக வரிக்கு உட்பட்ட வருமானமாகும். நாட்டில் உள்ள வருமான வரி விதிகளின் கீழ், அகவிலைப்படி பற்றிய தனித் தகவல் வருமான வரி ரிட்டனில் (ITR) கொடுக்கப்பட வேண்டும்.
அகவிலைப்படி என்றால் என்ன?
அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சம்பளமாக பெறும் பணத்தின் ஒரு பகுதியாகும். அதிகரிக்கும் பணவீக்கத்தால் அதிகரிக்கும் தினசரி செலவை ஈடுசெய்வதே இதன் நோக்கம். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஆண்டுக்கு இருமுறை (ஜனவரி மற்றும் ஜூலை) உயர்த்துவதற்கான விதிமுறை உள்ளது. நாடு முழுவதும் அரசு ஊழியர்களின் டிஏ ஒரே மாதிரி இருப்பதில்லை. இது வேலை இடம், துறை மற்றும் பணி மூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ