உங்களை ரொம்ப கடுப்பேற்றுபவரிடம் இருந்து கழன்று கொள்ள 7 ஈசி டிப்ஸ்!

7 Easy Ways To Cut Off Contact With People : ஒரு சிலர், வேண்டுமென்றே நம்மை கடுப்பேற்றுவதற்காக நம்முடன் இருப்பர். அவர்களை, மனம் புண்படுத்தாமல் எப்படி கழற்றி விடலாம்? இதோ சில டிப்ஸ்.  

Written by - Yuvashree | Last Updated : Nov 13, 2024, 06:51 PM IST
  • கடுப்பேற்றுபவர்களிடம் இருந்து கழன்று கொள்ள டிப்ஸ்!
  • அவர்கள் மனம் புண்படாமல் பார்த்துக்கொள்ளலாம்..
  • என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உங்களை ரொம்ப கடுப்பேற்றுபவரிடம் இருந்து கழன்று கொள்ள 7 ஈசி டிப்ஸ்!  title=

7 Easy Ways To Cut Off Contact With People : நாம் படிக்கும் இடத்தில், வேலை செய்யும் இடத்தில், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் இடத்தில், குடும்பமாக ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருக்கும் போது என அனைத்து இடங்களிலும் நம்மை கடுப்பேற்றுவதற்கு என்றே ஒருவர் வருவார். அந்த நபர் பேசுவது அல்லது அவரது நடவடிக்கைகள் நமக்கு ஒவ்வாமல் இருக்கலாம். அதனால், அவரை பார்த்தாலே நமக்கு கடுப்பாகலாம். அந்த சமயத்தில், அவரது மனம் புண்படாமல் நாம் எப்படி அவரை கழற்றி விடலாம் தெரியுமா? இதோ சில டிப்ஸ். 

பேசுவதை படிப்படியாக குறைக்கவும்:

ஒருவர் உங்களிடம் பேசுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அவரிடம் பேசுவதை நீங்கள் முதலில் நிறுத்திவிட வேண்டும். நீங்கள் அவர்கள் கூப்பிடும் தூரத்திலோ, பேசும் தூரத்திலோ இருக்க கூடாது. அவர் ஏதேனும் மெசஜ் செய்தால் அதை படிக்காமல் விடவும், போன் செய்தால் பிசியாக இருப்பதாக கூறுங்கள். இது, உங்கள் இருவருக்கும் இடையே ஒரு இடைவேளியை உருவாக்கும். புத்திசாலியாக இருப்பவர்கள் அவர்களாகவே புரிந்து கொண்டு உங்களுக்கு அதற்கு மேல் தொல்லை கொடுக்காமல் இருப்பர். 

முன்னுரிமை:

ஒருவர் பேசுவது, உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் கேட்கும் கேள்விகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் இருங்கள். அவர் உங்கள் குறித்து அல்லது உங்கள் குடும்பம் குறித்து அதிகமான பர்சனல் கேள்விகளை கேட்கும் போது அது குறித்து பேச விருப்பமில்லை என்பதை தெரிவிக்கலாம். 

குறைவான உரையாடல்கள்:

அவர் பேசுவது பிடிக்கவில்லை, ஆனால் அவருடனான உறவு உங்களுக்கு வேண்டும் என நினைத்தால், எது தேவையோ அதற்காக மட்டும அவரிடம் பேச வேண்டும். அவரிடம் எந்த கருத்து அல்லது தலைப்பு குறித்து பேசினால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்களோ, அது குறித்து மட்டும் பேசவும். 

கொடுக்கும் பதில்களில் கவனம் தேவை!!

உங்களுக்கு பிடிக்காதவர்கள் அல்லது, அதிகம் பழகாதவர்கள் உங்களை வெளியில் அழைக்கும் போது அதற்கு “வேலை இருக்கிறது” அல்லது “பார்த்துட்டு சொல்றேன்” போன்ற பதில்களை அளிக்கவும். இப்படியே நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டு இருந்தால், ஒரு நாள் அவரே உங்களை வெளியில் அழைப்பதை நிறுத்தி விடுவார். 

மேலும் படிக்க | குளிர் கால சளி தொல்லை போக்க 9 எளிமையான வீட்டு வைத்திய முறைகள்

சமூக ஊடக தொடர்புகளை குறைவாக வைத்துக்கொள்ளவும்:

அந்த நபர் அளவுக்கு மீறி செல்கிறார் என்றால், அவரை நேரில் பார்க்கும் போது மட்டும் பேசவும். சமூக வலைதளங்களில் இருந்து அவரது இணைப்பை துண்டிக்கலாம். வேலை ரீதியாக பேசினாலும், அதை மிகவும் குறைவாக மட்டும் வைத்துக்கொள்வது நல்லது. 

நேர்மையாக இருங்கள்:

மேற்கூறிய அனைத்தையும் செய்தும் அந்த நபர் உங்களை தொல்லை செய்வதை அல்லது கடுப்பேற்றுவதை நிறுத்தவில்லை என்றால் நீங்கள் நேர்மையாக இருப்பதுதான் உங்களுக்கும் நல்லது, அந்த நபருக்கும் நல்லது. “எனக்கு உங்களிடம் பேசுவது பிடிக்கவில்லை” அல்லது “உங்களுடன் பேச விருப்பமில்லை” என்று அவர்கள் அளவை மீறும் கூறுவது அந்த நபரிடம் யாரோ உறக்க சொல்வது போல இருக்கும். 

மேலும் படிக்க | உங்கள் குழந்தைகளுக்குக் கட்டாயம் இதை சொல்லிக்கொடுத்து வளருங்கள் !!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News