கொரோனா தொற்று சமயத்தில் தரைவழி போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து என பல போக்குவரத்து அம்சங்களும் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சேவைகள் தொடங்கிவிட்டது. விமான பயணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை போலவே அதற்கான டிக்கெட்டுகளுக்கும் அதிக விலை கொடுத்து தான் நாம் பயணிக்க வேண்டும். அதேசமயம் சில ஹேக்குகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் அடுத்த விமான பயணத்தில் சிறிது பணத்தை மிச்சப்படுத்தலாம். எப்போதும் கடைசி நேரத்தில் விமான போக்குவரத்துக்கு டிக்கெட் பதிவு செய்வது விலை உயர்வாக தான் இருக்கும், அதனால் கூடுமானவரை நீங்கள் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்வது உங்கள் பணத்தை கொஞ்சம் மிச்சப்படுத்த உதவும்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, குறைவான விலையில் விமான டிக்கெட்டுகளுக்கான தேடல்கள் தான் 240 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விமான பயணம் குறித்த கேள்வியில், விமான டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த நேரம் எப்போது? மற்றும் மலிவான விமானங்களை கண்டுபிடிப்பது எப்படி ? என்பது தான். கூகுள் ஃபிளைட்ஸ், ஆகஸ்ட் 2017 முதல் ஆகஸ்ட் 2022 வரையிலான டேட்டாக்களை ஆய்வு செய்து விமான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான சிறந்த நேரம் மற்றும் விமானக் கட்டணச் சலுகைகள் குறித்து கண்டறிந்துள்ளது. கூகுள் ஃபிளைட்ஸ் கூற்றுப்படி, வார இறுதி நாட்களை விட வார நாட்களில் விமான பயணம் மேற்கொள்வது பணத்தை மிச்சபடுத்தும் என்று கூறுகிறது. அதாவது குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிப்பதை காட்டிலும், வாரத்தின் நடுப்பகுதியில் பயணிக்கலாம்.
மேலும் படிக்கவும்: RBI Alert: பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் விற்பவர்கள் ஜாக்கிரதை
வார இறுதி நாட்களில் செல்லும் விமானங்களை விட திங்கள், செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் புறப்படும் விமானங்கள் 12 சதவீதம் மலிவானவை என்று கூறப்படுகிறது, மேலும் வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருந்தால் 20 சதவிகிதம் சேமித்து கொள்ளலாம். விமானத்தில் குறைவான விலையில் பயணிக்க விரும்புபவர்கள் எவ்வளவு சீக்கிரம் முன்பதிவு செய்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்க உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதற்கு 21-60 நாட்களுக்குள் டிக்கெட்டின் விலைகள் மிகக் குறைவாக இருக்கும், விமானம் புறப்படுவதற்கு 44 நாட்களுக்கு முன்பு டிக்கெட் சராசரி விலையில் இருக்கும்.
உதாரணமாக ஸ்பிரிங் பிரேக் டிக்கெட்டுகள் புறப்படுவதற்கு 38 நாட்களுக்கு முன்பு மலிவானதாக இருக்கும், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் விமானம் புறப்படும் 21 நாட்களுக்கு முன்னதாக மலிவான விலையில் இருக்கும்.
சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளுக்குப் பதிலாக செவ்வாய், புதன் அல்லது வியாழக்கிழமைகளில் விமானங்களில் செல்லும்போது விலைகள் சராசரியாக 1.9 சதவீதம் குறைவாக இருக்கும். பணத்தைச் சேமிக்க சிறந்ததாக லேஓவர் விமானம் கருதப்படுகிறது, கனெக்டிங் பிளைட்டுகளை விட நான்-ஸ்டாப் பிளைட்டுகளில் பயணித்தால் 20 சதவீதம் பணத்தை மிச்சப்படுத்தலாம். மேலும் விமான கட்டணங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் பார்க்க, காலண்டர் வியூ, டேட் க்ரிட் மற்றும் ப்ரைஸ் கிராஃப் போன்றவற்றை பயன்படுத்தலாம் என கூகுள் ஃபிளைட்ஸ் தெரிவித்துள்ளது. காலண்டர் வியூ மற்றும் டேட் க்ரிட் போன்றவை நீங்கள் புறப்படும் நாள் மற்றும் திரும்பும் நாளில் எவ்வளவு பணத்தை சேமிக்க முடியும் என்பதை காட்டுகிறது.
மேலும் படிக்க | Jio Recharge Plan: இரண்டு மாத வேலிடிட்டியில் புதிய பிளானை கொண்டுவந்திருக்கும் ஜியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ